‘பார்க்க அழகாத் தெரியணும்’ என்பதுதான் பலரின் எண்ணமும், ஆசையும். அதற்கேற்றபடி கண்ணாடியை எப்படித் தேர்ந்தெடுக்க வேண்டும்?
கண்ணாடி பெரியதாகவும் இல்லாமல், சிறியதாகவும் இல்லாமல் ஃபிட்டாக இருப்பது அவசியம். கண்ணாடி போட்டுக்கொண்டு கீழே குனிந்தால், அது இறங்காமல் இருந்தாலே கண்ணாடி ஃபிட்டாக இருப்பதாக எடுத்துக்கொள்ளலாம்.
கண்ணாடியின் ஃபிரேம் காதுகளின் மேல் பகுதியில் அழுத்துவது போல இருக்கக்கூடாது. அப்படியிருந்தால் அந்தப் பகுதியில் வலி ஏற்படத் தொடங்கிவிடும்.
உருண்டையான முகத்தோற்றத்துக்கு செவ்வக ஃபிரேம், ஓவல் வடிவ முகத்தோற்றத்துக்கு சதுர ஃபிரேம் என முகத்தோற்றத்துக்கு ஏற்றவாறு கண்ணாடியைத் தேர்ந்தெடுக்க வேண்டும்.
புருவங்களுக்கும், கண்ணாடி ஃபிரேமுக்கும் இடையே அதிக இடைவெளி இருக்கக்கூடாது. மேலும், நோஸ் பேட் (nose pad) சரியாக மூக்கில் பொருந்த வேண்டும். ஆக, மொத்தத்தில், கண்ணாடி ஃபிட்டாக இருக்க வேண்டும்.
பொதுவாகவே அதிக பவர் கொண்ட கண்ணாடியில், லென்ஸின் தடிமன் அதிகம் இருக்கும். ஆனால், தற்போது தொழில்நுட்பங்கள் மூலம் கண்ணாடியின் தடிமன் குறைக்கப்பட்டுள்ளது. டி.வி, கணினி, மொபைல் போன் பார்ப்பவர்களுக்கு, அதிலிருந்து வரும் புற ஊதாக் கதிர்களைத் தடுக்கும் லென்ஸ்களும் தற்போது அறிமுகம் ஆகியுள்ளன. பவர் மற்றும் கூலிங் கிளாஸ் என இரண்டுமாகவும் செயல்படும் கண்ணாடிகள் கூட அறிமுகமாகி விட்டன. அவற்றை தங்கள் தேவைக்கேற்ப தேர்ந்தெடுத்துக் கொள்ளலாம்.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
கிச்சன் கீர்த்தனா: பாலக் தாலி பித்
டிஜிட்டல் திண்ணை: அண்ணாமலை கைது? களத்தில் குதிக்கும் அமித் ஷா… பரபரப்புத் திருப்பங்கள்!