How to choose the right lip balm?

பியூட்டி டிப்ஸ்: உங்களுக்கான லிப் பாம் எது?

டிரெண்டிங்

லிப்ஸ்டிக் பயன்படுத்த விரும்பாதவர்கள் லிப் பாம் மட்டும் உபயோகிக்கும் பழக்கம் அதிகரித்து வரும் நிலையில் சரியான லிப் பாமை தேர்ந்தெடுப்பது எப்படி? எந்த விஷயங்களை கவனித்து வாங்க வேண்டும்?

லிப் பாம் தேர்ந்தெடுப்பது எப்படி என்று பார்ப்பதற்கு முன், எந்தக் காரணத்துக்காக லிப் பாம் பயன்படுத்த விரும்புகிறீர்கள் என்பதைத் தெரிந்துகொள்ள வேண்டியது அவசியம். அந்தக் காரணத்துக்கேற்ற லிப் பாம் வாங்கிப் பயன்படுத்துவதுதான் சரியாகவும் இருக்கும்.

சிலருக்கு உதடுகள் எப்போதும் வறண்டு காணப்படும். அவர்களுக்கு மாய்ஸ்ச்சரைசிங் தன்மை கொண்ட லிப் பாம் பயன்படுத்தினாலே போதுமானதாக இருக்கும். இன்னும் சிலருக்கு உதடுகள் வெடித்துப் போகும் பிரச்சினை இருக்கும். அவர்கள் அதற்கான காரணத்தை முதலில் தெரிந்துகொள்ள  வேண்டும்.

சரும மருத்துவரை அணுகி, உதடுகள் வெடித்துப்போவதற்கான காரணம் அறிந்து அதற்கேற்ற லிப் பாம் பயன்படுத்தலாம். இன்னும் சிலருக்கு உதடுகளின் இயல்பான நிறம் மாறி, கருமையாக இருக்கும். குறிப்பாக, புகைப்பழக்கம் உள்ளவர்களுக்கு, அலர்ஜி உள்ளவர்களுக்கு இப்படி இருக்கலாம். இவர்கள் லிப் பாமில் மாய்ஸ்ச்சரைசர் மட்டுமன்றி, சன் ஸ்கிரீனும் உள்ளதுபோல தேர்ந்தெடுத்துப் பயன்படுத்தலாம்.

சரும மருத்துவரை அணுகினால், உதடுகளின் கருமையைப் போக்கும்படியான லிப் லைட்டனிங் தன்மை கொண்ட லிப் பாமை பரிந்துரைப்பார்.

இப்படி எந்தத் தேவையும் இல்லை… வெறும் அழகுக்காக மட்டுமே லிப் பாம் உபயோகிக்கிறேன் என்பவர்கள், மாய்ஸ்ச்சரைசர் உள்ள லிப் பாம் பயன்படுத்தினாலே போதுமானது.

ஆனால், அதில் வாசனையோ, அலர்ஜியை ஏற்படுத்தும் விஷயங்களோ இல்லாதபடி பார்த்துத் தேர்ந்தெடுப்பது நல்லது.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

மக்களவைத் தேர்தலுக்குள் சிஏஏ சட்டம் அமல் : அமித்ஷா உறுதி!

கிளாம்பாக்கத்தில் விடிய விடிய காத்திருந்த பயணிகள் : என்ன நடந்தது?

”எங்கேயும் காதல்” : காதலர்களுக்காக விமானத்தில் பறக்கும் ரோஜாக்கள்

”இனிமேல நல்ல காலம் தான்”… பணமழையில் நனையும் பிரதீப் ஆண்டனி

+1
0
+1
0
+1
0
+1
1
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *