How to Choose the Right Bangle

பியூட்டி டிப்ஸ்: உங்களுக்கேற்ற வளையல் எது?

டிரெண்டிங்

பச்சிளம் குழந்தைகள் முதல் பாட்டிகள் வரை அனைத்து வயது பெண்களின் கரங்களையும் அழகாக்கும் ஆபரணம், வளையல்கள்.

நமது கலாசாரத்துடன் பின்னிப் பிணைந்தவை. பல நூற்றாண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த பெண்கள் வளையல் அணிந்திருக்கிறார்கள் என்பது அகழ்வாய்வுகளில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அதேநேரத்தில் இன்றைய காலகட்டத்தில் பேஷன் உலக புதுமைக்கு ஈடுகொடுக்க வளையல்கள் புதியரக டிசைன்களில் மின்ன தொடங்கி இருக்கின்றன. How to Choose the Right Bangle

வளையல் அணிவதிலும் கவனிக்க வேண்டிய விஷயங்கள் இருக்கின்றன. ஸ்டைலுக்காக ஒரே ஒரு வளையல் மட்டும் அணிவது, ஒரே ஒரு கையில் மட்டும் வளையல் அணிவது போன்றவை கூடாதாம். சிறிய அளவுகளில் இருந்து பெரிய அளவுகள் வரை அடுக்கடுக்காக அணியலாம். வளையல்கள் கைகளில் ஒட்டி இதமாக வருடிக்கொண்டிருக்க வேண்டும்.

புடவை உடுத்தும்போது கை நிறைய வளையல்களை அடுக்கலாம். ஆடைகளில் இடம்பெறும் டிசைன்களுக்கு இணையான, அலங்கார வேலைப்பாடுகளையும் தேர்ந்தெடுத்து பயன்படுத்தலாம். அது பார்ப்பதற்கு அழகாக இருக்கும்.

பட்டுச்சேலைக்கு கற்கள் பதித்த வளையல்கள் கூடுதல் அழகு சேர்க்கும். விசேஷ நிகழ்ச்சிகளுக்கு செல்லும்போது ஜொலிக்கும் வளையல்களை அணிந்தால் எடுப்பாக இருக்கும்.

உயரமான பெண்கள் மெல்லிய வளையல்களை அணிய வேண்டும். குட்டையான பெண்களுக்கு பட்டையான வளையல்கள் பொருத்தமாக இருக்கும். How to Choose the Right Bangle

கண்ணாடி வளையல்களில் ஒவ்வொரு நிறமும் ஒவ்வொரு விதத்தில் மகத்துவம் கொண்டவை. மஞ்சள் நிறம் மகிழ்ச்சியை தரும், நல்ல எண்ணங்களை விதைக்கும், மங்கலம் சேர்க்கும். பச்சை நிறம் மனதை சாந்தப்படுத்தும், அதிர்ஷ்டம் தேடி தரும். ஊதா நிறம் சுயமாக சிந்தித்து முடிவெடுக்கும் ஆற்றலை அதிகப்படுத்தும். சிவப்பு நிறம் எதையும் எதிர்கொள்ளும் சக்தியை கொடுக்கும். ஆரஞ்சு நிறம் வெற்றியை தேடித் தரும். வெள்ளை நிறம் இனிய தொடக்கத்தை ஏற்படுத்தி கொடுக்கும். கருப்பு நிறம் மன தைரியத்தை அதிகரிக்கும். பச்சை மற்றும் சிவப்பு நிற வளையல்கள் சுப நிகழ்ச்சிகளில் அதிகம் இடம் பிடித்து உற்சாகத்தை வரவழைக்கும்.

கண்ணாடி வளையல்கள் உடைந்திருந்தாலோ, கீறல் விழுந்திருந்தாலோ அதை அணியக்கூடாது என்பது மரபு.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

கிச்சன் கீர்த்தனா : கறுப்பு உளுந்து உருண்டை

அப்போ எதுக்கு மலைய விட்டு போனாரு : அப்டேட் குமாரு

பியூட்டி டிப்ஸ்: அழகான மெஹந்தியைப் பெற இதைச் செய்யுங்க!

சம்மர் ஸ்பெஷல் ஹெல்த் டிப்ஸ்: தினமும் இளநீர் பருகுவது ஆபத்தா?

+1
0
+1
0
+1
0
+1
1
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *