How to Choose the Perfect Fashion Accessories

பியூட்டி டிப்ஸ்: விசேஷங்களுக்கேற்ற ஆடையும், அணிகலன்களும்…

டிரெண்டிங்

வட இந்தியத் திருமணங்கள் பொதுவாகவே ஆடல் பாடல் என்று அமர்க்களமாகவும், பிரகாசமாகவும் இருக்கும்.

எனவே, மெட்டாட்டாலிக் கோல்டன் பட்டிஸ்களுடன் இருக்கும் ப்ரொகேட் லெஹங்காக்கள் மற்றும் பிரகாசமான ராணி இளஞ்சிவப்பு சேலைகளை அணிந்தால் அவை ஆடம்பரமான தோற்றத்தைத் தருவதாக இருக்கும்.

கிறிஸ்டல் பதித்த நெக் லைன்ஸ் மற்றும் சங்கி அலங்காரத்துடன் நாம் விழாவில் நுழைந்தால் அனைவரையும் கவர்வோம் என்பதில் சந்தேகமே வேண்டாம்.

வட இந்தியத் திருமணங்களை ஒப்பிடும்போது தென்னிந்தியத் திருமணங்கள் மாறுபட்டவை. ஆனால், உடை விஷயத்தில் பாரம்பரிய நெசவுப் புடவைகளான காஞ்சிப்பட்டு மற்றும் பட்டின் பல வகைகளை அணிந்து கொள்வதைப் பெருமிதமாக நினைக்கிறார்கள்.

எனவே, இதுபோன்ற திருமணங்களுக்கு பட்டுச்சேலைகள் அல்லது அணிந்து கொள்ள வசதியான பட்டு சல்வார் சூட், பிளெயின் ஜார்ஜெட் சூட்டுடன் டிசைனர் துப்பட்டாவை அணிந்து செல்லலாம்.

இரவு நேரத் திருமணம் அல்லது வரவேற்பு நிகழ்ச்சிகளுக்குச் செல்வதாக இருந்தால் நாம் அணியும் ஆடைக்குத் தகுந்தாற்போல் வைர, அமெரிக்கன் டைமண்ட், ஜெர்க்கான் கற்கள் பதித்த நகைகளை அணியலாம்.

இஸ்லாமிய கலாசாரத்தின் திருமண விழாவான நிக்கா என்றால் அணிந்து செல்லக்கூடிய ஆடைகளின் வண்ணங்கள் மற்றும் ஸ்டைலில் சிறிதளவு மாறுபாடுகள் இருக்கும். ஷரா சூட்ஸ், அனார்கலி சூட்ஸ் மற்றும் இந்தோ – வெஸ்டர்ன் லெஹங்கா ஆடைகளை அணிந்து செல்லலாம்.

கிறிஸ்துவத் திருமணங்களில் லாங் குர்த்திஸ், லாங் ஃப்ராக், சுடிதார்கள், லெஹங்காக்கள் என அணியலாம். திருமணப் பெண் அழகிய வெள்ளை நிற ஃப்ராக்கில் வரும்போது அந்தத் திருமணத்துக்குச் செல்லும் நாமும் லாங் ஃப்ராக் போன்றவற்றை அணிந்தால் மிகவும் பொருத்தமாக இருக்கும்.

லாங் ஃப்ராக் அணியும்போது மிகவும் மெல்லிய செயின், மெல்லிய ப்ரே ஸ்லெட்,  மாடர்ன் காதணி போன்றவற்றை அணிந்து சென்றால் அனைவரது கவனத்தையும் ஈர்ப்பாக நாம் இருப்போம்.

ஆடைக்கேற்ற ஆபரணங்கள் என்பவை தவிர்க்க முடியாத ஒன்றாகிவிட்டது. தங்க, வைர நகைகள் மட்டுமல்லாமல் இமிடேஷன் நகைகளும் திகைப்பூட்டும் அளவுக்கு அணிந்தால் ஆடம்பரமான தோற்றத்தைத் தருவதாக வந்து விட்டன.

நெக்லஸ், ஹாரம், சோக்கர், அட்டிகை, பிப் நெக்லஸ், ஆத் நெக்லஸ், காலர் நெக்லஸ், குந்தன் ஜுவல்லரி, கோல்டு ஜுவல்லரி, டெ ம்பிள் ஜுவல்லரி, காசுமாலை, ஃப்லிக்ரீ ஜுவல்லரி, ஆன்டிக் ஜுவல்லரி,  நவரத்ன அணிகலன், மாங்கா மாலை  என எதை வேண்டுமானாலும் நம் ஆடைக்குப் பொருத்தமானதைத் தேர்ந்தெடுத்து அணியலாம்.

சில உடைகளுக்கு மிகப்பெரிய ஜிமிக்கிகளை அணியும்போது பார்ப்பவரை கவரக்கூடியதாக இருக்கும்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

என்னென்ன சொல்றாரு பாருங்க: அப்டேட் குமாரு

டிஜிட்டல் திண்ணை: வருகிறது உள்ளாட்சித் தேர்தல்…

நுகர்வோர் பாதுகாப்பு சட்டம் வழக்கறிஞர்களுக்கு பொருந்தாது: உச்சநீதிமன்றம் தீர்ப்பு!

ரூ.1799-ல் நாய்ஸ் கேன்சலேஷன் இயர்பட்ஸ்… என்ன மாடலா இருக்கும்?

+1
0
+1
0
+1
0
+1
1
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *