உயரம் குறைவாக இருப்பவர்களால்கூட நீளமாக இருக்கும் ரெடிமேட் சுடிதாரை தங்களுக்கு ஏற்றாற்போல ஓரளவுக்கு ஆல்டர் செய்துகொள்ள முடியும். ஆனால், நல்ல உயரமாக இருப்பவர்களுக்கு ரெடிமேடில் சுடிதார் அமைவது கொஞ்சம் கடினம்தான். எனவே, மெட்டீரியல், ரெடிமேட் எதுவாக இருந்தாலும் இவர்கள் தங்கள் உயரத்தில் கவனம் வைத்து தேர்ந்தெடுக்க வேண்டும்.
உடற்பருமன் உள்ளவர்கள் ரெடிமெட் பேன்ட்டை வாங்கிப் போடும்போது இடுப்பு ஓகேவாக இருக்கும். ஆனால், தொடைப்பகுதி மிகவும் டைட்டாக இருக்கும். சரி, இதற்கு அடுத்த சைஸ் வாங்கலாம் என்று நினைத்தால் அந்தப் பேன்ட்டில் தொடைப்பகுதி சரியாக இருக்கும். ஆனால், இடுப்பு லூசாக இருக்கும்.எனவே, உங்களுக்கு ஏற்ற டாப்ஸ், பேன்ட் அல்லது சுடிதார் செட் போன்றவை ரெடிமேடில் கிடைக்கவில்லையெனில் துணி எடுத்துத் தைத்துக் கொள்வது நல்லது.
அடுத்து, உயரமாகவும் அதிக உடற்பருமன் உள்ளவர்களுக்கும் ஆன் லைனில் 5XL போன்ற அளவுள்ள டிரஸ்கள் அவ்வளவு எளிதில் கிடைக்காது. அப்படியே கிடைத்தாலும் அதில் பெரிதாக வெரைட்டி இருக்காது. நார்மலான கடைகளில் கூட 5XL போன்றவை அதிகம் விற்பனை ஆகாது என்பதால் அவற்றை அதிகம் ஸ்டாக் வாங்கி வைக்க மாட்டார்கள். இப்படிப்பட்டவர்கள் அதிகம் ரிஸ்க் எடுக்காமல் மெட்டீரியலை எடுத்து தங்களுக்கு ஏற்றாற்போல ஃபேஷனபிளாகத் தைத்துக் கொள்ளலாம். அதுவே செட்டாகும்.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
கிச்சன் கீர்த்தனா: மகிழம்பூ முறுக்கு!
விஜய் மாநாடு: உதயநிதி முதல் விஜய் சேதுபதி வரை… குவியும் வாழ்த்து!