தீபாவளி வந்துவிட்டது. இனி துணி வாங்கி பிளவுஸ் தைப்பதற்கு நேரமிருக்காது என்று நினைப்பவர்களின் முதல் சாய்ஸ், ரெடிமேட் பிளவுஸாகத்தான் இருக்கும்.
அப்படி ரெடிமேட் பிளவுஸ் வாங்க நினைப்பவர்கள் இதையெல்லாம் கவனத்தில் கொள்ளுங்கள் என்கிறார்கள் ஆடை வடிவமைப்பாளர்கள்.
“ஃபிட்டாக இருக்க வேண்டிய ஓர் உடை பிளவுஸ் என்பதால், மிகவும் அவசரம் என்றால் மட்டும் ரெடிமேட் பிளவுஸ் பக்கம் செல்லுங்கள். குறிப்பாக, உங்களது மார்பகங்களின் சுற்றளவு மற்றும் வெய்ஸ்ட் (Waist) எனப்படும் பிளவுஸ் முடியும் இடத்தின் சுற்றளவு ஆகியவற்றுக்கு ஏற்ற சரியான ரெடிமேட் பிளவுஸை தேர்ந்தெடுத்து அணியுங்கள்.
டிசைன் நன்றாக இருக்கிறது என்ற ஒரே காரணத்துக்காக கொஞ்சம் லூசாக இருந்தாலும் பரவாயில்லை என்று ரெடிமேட் பிளவுஸ் ஒன்றை வாங்கி, அதை ஆல்டர் செய்து போட்டால்கூட அது உங்களது உடலமைப்புக்குப் பொருத்தமாக இருக்காது.
ரெடிமேட் பிளவுஸில் அக்குள் பகுதியின் ஸ்டிச்சிங் உங்களுக்குச் சரியாக அமைவதிலும் சிக்கல் இருக்கும். அதேபோல, ஒரு வசதியான உணர்வையும் அது உங்களுக்குக் கொடுக்காது. எனவே, உங்களது ஷேப் மற்றும் உங்களுக்கான சரியான அளவு ஆகிய இரண்டிலும் கவனம் செலுத்தி ரெடிமேட் பிளவுஸை வாங்குங்கள்.
ஸ்லீவ்லெஸ் பிளவுஸ் அணிவது உங்களுக்கு ஓகே என்றால், ரெடிமேட் பிளவுஸ் வாங்கும்போது ஷார்ட் ஸ்லீவ், எல்போ ஸ்லீவ் அல்லது டிசைனர் ஸ்லீவ் என்று போவதற்கு பதிலாக ஸ்லீவ்லெஸ் பிளவுஸ் வாங்கலாம்.
உடல்பகுதியை மட்டும் கொஞ்சம் பிடித்துப் பயன்படுத்திவிடலாம் அது செட் ஆகிவிடும். மற்றபடி அக்குள் பகுதி, கை போன்றவை சரியாக அமைய வேண்டும் என்ற டென்ஷன் இதில் இருக்காது. `பிளவுஸ்’, `க்ராப் டாப்’ (Crop top) என இதை இரண்டு விதங்களிலும் பயன்படுத்திக் கொள்ளலாம்.
ரெடிமேட் ஸ்லீவ் பிளவுஸ்தான் உங்கள் தேர்வு எனில், முட்டிக்கு மேல் வரை கை இருக்கும் `எல்போ ஸ்லீவ்’ (Elbow Sleeve) பிளவுஸ் போடலாம்.
‘முக்கால் கை’ (Three fourth), `முழு கை’ (Full Sleeve) என்று ரெடிமேட் பிளவுஸ் வாங்கினால் அதை ஆல்டர் பண்ணுவது கொஞ்சம் கஷ்டம்.
சில ரெடிமேடு பிளவுஸ்கள் எலாஸ்டிக் மெட்டீரியலால் உருவாக்கப்பட்டிருக்கும். அதை வாங்கி அணியும்போது உடலுக்கு ஏற்றாற்போல பாந்தமாக ஃபிட் ஆகிவிடும்.
மெட்டீரியல் வாங்கி பிளவுஸ் தைக்க நினைப்பவர்கள் மிகவும் விறைப்பாக (Stiff) உள்ள மெட்டீரியலை தேர்ந்தெடுக்காமல், கொஞ்சம் மிருதுவாகவும், நெகிழ்வுத்தன்மையுடனும் (Flexible) உள்ள மெட்டீரியலைத் தேர்ந்தெடுப்பது சிறப்பு” என்று பரிந்துரைக்கிறார்கள்.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
கிச்சன் கீர்த்தனா : காஜு பிஸ்தா ரோல்ஸ்
வக்ஃப் மசோதா.. ஜேபிசி கூட்டமா? பிஜேபி கூட்டமா? ஆ.ராசாவைப் பார்த்து பயப்படும் டெல்லி
விளையாட வந்தது ஒரு குத்தமா? காம்பியாவை துவைத்து ஜிம்பாப்வே நிகழ்த்திய சாதனைகள்!
அலர்ட் ஆகிக்கோங்க மக்களே… 19 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை!