பியூட்டி டிப்ஸ்: உங்களுக்கான பிளவுஸை எப்படித் தேர்ந்தெடுக்கிறீர்கள்?

Published On:

| By Selvam

உடற்பருமன் உள்ளவர்கள் பிளவுஸின் கழுத்தை கொஞ்சம் `டீப்’ (Deep) ஆக, அகலமாக வைக்க வேண்டும்.

மிகவும் கழுத்தை ஒட்டி வருவதுபோல் `க்ளோஸ்டு’ (Closed) ஆக கழுத்துப் பகுதியை வைத்தால், அவர்களின் தோள்பகுதி (Shoulder) இன்னும் பெரிதாகத் தெரியும்.

குறிப்பாக, `போட் நெக்’ (Boat neck), `க்ளோஸ் நெக்’ (Close neck) போன்றவற்றை வைப்பதைவிட `வி நெக்’ (V neck) போன்ற அகலமாக வரும் `வைடு’ (Wide) நெக் டிசைன்களை வைக்கலாம்.

கைகளில் பெரிய பெரிய `பஃப்’, `ஃப்ரில்’ மற்றும் `ஃபேப்ரிக்’களை (Puff, Frill, Fabric) இணைத்து டிசைன்கள் வைப்பது போன்றவை, கைகளை இன்னும் குண்டாகக் காட்டும் என்பதால் இவற்றைத் தவிர்ப்பது நல்லது.

அதையும் மீறி பேட்டர்ன் பிளவுஸ் போட நினைத்தால் மிகவும் சிம்பிளாக, பிளவுஸின் கையோடு ஒட்டி இருக்கும்படியான பேட்டர்ன்களை வைப்பது நல்லது. மினிமல் பஃப் வைத்துக்கொண்டால் கைகள் மிகவும் பெரிதாகத் தெரியாது.

ஒல்லியாக இருப்பவர்களுக்கு முன் கழுத்தில் உள்ள எலும்புகள் (Collarbone) நன்றாகத் தெரியும். எனவே, இதை மறைப்பதற்கு இவர்கள் க்ளோஸ் நெக் பிளவுஸ் அணியலாம்.

போட் நெக் மாதிரியான ஸ்டைல்களில் பிளவுஸ் போடுவதும் இவர்களுக்கு சிறந்த ஆப்ஷனாக இருக்கும்.

இவர்கள் கையில் பெரிய பெரிய பஃப் மற்றும் பேட்டர்ன்களை இணைத்துப் போட்டுக்கொண்டால் கைகள் மிகவும் ஒல்லியாகத் தெரிவதைத் தவிர்க்க முடியும்.

எல்போ ஸ்லீவ், த்ரீ போர்த் ஸ்லீவ் போன்றவற்றையும் ஒல்லியாக இருப்பவர்கள் அணியலாம்.

பிளவுஸின் கைகளை மிகவும் ஃபிட்டாக தைக்காமல் கொஞ்சம் ஃப்ரில், பஃப், தொங்கும் வகையிலான ஹேங்கிங்ஸ் என்று டிசைன் செய்து தைத்தால் கைகள் மிகவும் ஒல்லியான லுக்கில் இல்லாமல் அழகாகத் தெரியும்.

உயரமாக இருப்பவர்கள் ஷார்ட்டாக பிளவுஸ் போட்டால் முதுகின் கீழ்ப்பகுதி பிளவுஸ் தூக்கிக்கொள்ளும். எனவே, இவர்கள் இடுப்பு வரைக்கும் நீளம் இருக்கும்படி பிளவுஸ் அணிந்தால் பொருத்தமாக இருக்கும்.

பிளவுஸின் நீளத்திற்குத் தகுந்தாற்போல கழுத்தின் இறக்கத்தையும் டீப் ஆக வைக்க வேண்டும். அப்போதுதான் அந்த பிளவுஸ் கம்ப்ளீட் ஆகும்.

பிளவுஸின் நீளத்துக்குத் தகுந்தாற்போல கழுத்தின் இறக்கம் இல்லையென்றால் டல் லுக் ஆகிவிடும்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

விஜய் மாநாட்டில் கவனம் ஈர்த்த தொகுப்பாளினி: யார் இவர்?

தீபாவளி ஆஃபரா? பொங்கல் ஆஃபரா? – அப்டேட் குமாரு

“காமராஜரை சொந்தம் கொண்டாட எங்களுக்கே உரிமை” : செல்வப்பெருந்தகை

தாம்பரம்: 150 கிலோ கஞ்சா பறிமுதல்… இருவர் கைது!

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel