கைகளின் வசீகரத்தை அதிகரிப்பவை நகங்கள். அவற்றை பராமரிப்பதிலும், அழகுபடுத்துவதிலும் பெண்களின் ஆர்வம் மிகுந்திருக்கும். நகங்களின் அழகை மேலும் அதிகரிப்பதற்காக விதவிதமான நெயில் பாலிஷ் பூசுவார்கள்.
உங்கள் சருமத்துக்குப் பொருந்தும் வகையிலான நெயில் பாலிஷை தேர்ந்தெடுத்தால், நகங்களின் அழகை மேலும் மெருகூட்ட முடியும். அதற்கு உதவும் சில ஆலோசனைகள் இதோ…
சிலரின் சருமம் மாநிறமாக இருந்தாலும், நகத்தின் நிறம் வெண்மையாக இருக்கும். இன்னும் சிலருக்கு சரும நிறம் வெண்மையாக இருந்தாலும், நகத்தின் நிறம் கருமையாக இருக்கும். இதை கவனிக்காமல், நெயில் பாலிஷின் நிறத்தை தேர்வு செய்தால், அது கைகளின் அழகை கெடுக்கும்.
சற்று கருமையான அல்லது மாநிற சருமம் கொண்டவர்கள், பழுப்பு (பிரவுன்) நிறத்தைத் தவிர மற்ற அடர் நிறங்களை தேர்வு செய்யலாம்.
அடர் பச்சை, பர்கண்டி எனப்படும் அடர் சிவப்பு போன்ற நிறங்களில் நெயில் பாலிஷ் தேர்ந்தெடுக்கலாம். இது கைகளுக்கு வசீகர தோற்றம் கொடுப்பதுடன், நகங்களுக்கும் அழகாக பொருந்தும்.
பிரகாசமான ஆரஞ்சு மற்றும் பிங்க் நிறங்கள் நகங்களுக்கு கவர்ச்சிகரமான அழகையும், மாடர்ன் தோற்றத்தையும் தரும்.
மாநிற சருமம் கொண்டவர்கள், வெளிர் நிறங்களைத் தவிர்ப்பது சிறந்தது. அவை கைகளுக்கு மங்கலான தோற்றத்தைக் கொடுக்கும். குறிப்பாக, சில்வர், வெள்ளை, நியான் ஆகிய நிறங்களை தவிர்ப்பது சிறந்தது.
வெள்ளை நிற சருமம் கொண்டவர்களுக்கு பிங்க், மஞ்சள், ஆரஞ்சு மற்றும் சிவப்பு போன்ற பிரகாசமான மற்றும் துடிப்பான நிறங்கள் பொருந்தும். தங்கம் மற்றும் சில்வர் போன்ற உலோக நிறங்கள், கைகளின் வசீகரத்தை மேம்படுத்தும்.
நெயில் ஆர்ட்ஸ் செய்து கொள்ள விரும்புபவர்களுக்கு இந்த நிறங்கள் சிறப்பாக இருக்கும். இவர்கர் ள் அடர் ஊதா, நீலம், அடர் சிவப்பு, மெட்டாட் லிக் பிரவுன் போன்ற நிறங்களை தவிர்க்க வேண்டும்.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
டாப் 10 செய்திகள்… இதை மிஸ் பண்ணாதீங்க!
கிச்சன் கீர்த்தனா : முருங்கைக்காய் முந்திரி பொரியல்
முப்பாட்டன் முருகன் முத்தமிழ் பாலிடிக்ஸ்: அப்டேட் குமாரு
தங்கம் தென்னரசு வழக்கு : நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் சரமாரி கேள்வி!