பியூட்டி டிப்ஸ்: லிப் பாம் பயன்படுத்துபவரா நீங்கள்? இந்த விஷயங்களில் கவனம் தேவை!

Published On:

| By Selvam

லிப் பாம் ஆண் – பெண் இருவருமே பயன்படுத்துகிற ஒரு சருமப் பராமரிப்பு பொருள் என்று சொல்லலாம். உதடுகளை வறட்சியில் இருந்து நீக்கி மென்மையாகவும் ஹைட்ரேட்டிங்காகவும் வைத்திருக்கவே நாம் லிப் பாம் பயன்படுத்துகிறோம்.

ஆனால், அந்த லிப் பாம்களை வாங்கும்போது நாம் சில தவறுகளை செய்கிறோம். இனிமேல் கடைகளில் சென்று லிப் பாம் வாங்கும்போது என்னவெல்லாம் சரிபார்த்து வாங்க வேண்டும், என்ன தவறுகளைச் செய்யக் கூடாது என்பது பற்றி பார்ப்போம்.

ஆண்கள் லிப் பாம் வாங்கும்போது பெரும்பாலும் எந்தவித கலரும் இல்லாமல் பிளெயின் பெட்ரோலியம் ஜெல்லியை வாங்கி பயன்படுத்துகிறார்கள் அல்லது முக்கியமான பிராண்டுகளில் உள்ள கிளிசரின் சேர்த்த லிப் பாம் வாங்குவார்கள்.

ஆனால், பெண்கள் பெரும்பாலும் லிப் பாம் வாங்கும்போது நிறைய தவறுகளைச் செய்கிறார்கள். முதலில் லிப் பாமின் வாசனை (பிளேவர்) என்ன என்றுதான் பார்க்கிறார்கள். அடுத்ததாக, சிலர் அதிலும் குறிப்பிட்ட நிறம் வேண்டும் என்று எதிர்பார்க்கிறார்கள். How to Choose Best Lip Balm

எனவே, நீங்கள் வாங்கும் லிப் பாமில் உதடுகளை மென்மையாக்கும் உட்பொருள்கள் சேர்க்கப்பட்டு இருக்கிறதா என்றுதான் பார்க்க வேண்டும். குறிப்பாக வறட்சியைப் போக்கி மென்மையாக்கும் ஷியா பட்டர், தேங்காய் எண்ணெய், தேன்மெழுகு ஆகியவற்றில் ஏதேனும் ஒன்றோ ஒன்றுக்கு மேற்பட்டவையோ இருக்கிறதா என்று பாருங்கள்.

கோடையில் சூரியக் கதிர்வீச்சின் தாக்கத்தால் உதடுகள் கருமையாகும். அவற்றில் இருந்து பாதுகாக்க உங்களுடைய லிப் பாமில் SPF இருக்கிறதா என்பதை கவனிக்க வேண்டும்.

லிப் பாமை பொறுத்தவரையில் சேர்க்கப்படும் உட்பொருள்களில் உள்ள இயற்கையான வாசனை இருந்தால் நல்லது. அந்த இயற்கையான வாசனையோடு அதன் தன்மையும் அதிலுள்ள பயன்களும் சேர்ந்து கிடைக்கும். How to Choose Best Lip Balm

ஆனால், செயற்கையாக சேர்க்கப்பட்ட வாசனை திரவியங்கள் (சென்ட் வகைகள்) சேர்க்கப்பட்டிருந்தால் அந்த லிப் பாம்களைத் தேர்வு செய்யக் கூடாது. அவை உதடுகளில் பாதிப்பை ஏற்படுத்தக்கூடும். குறிப்பாக சென்சிடிவ் சருமம் உள்ளவர்களுக்கு உதடுகளில் எரிச்சல் மற்றும் அரிப்பு உள்ளிட்ட பிரச்சினைகளை உண்டாக்கும்.

அதிக ரசாயனங்கள் கலந்த பொருள்கள் உள்ள லிப் பாம் உதட்டில் எரிச்சல், வலி, தோலுரிதல் உள்ளிட்ட பிரச்சினைகளையும் ஏற்படுத்தலாம். அதனால் செயற்கை ரசாயனங்களை விட இயற்கை பொருள்கள் உள்ளவை உங்களுடைய உதடுகளை பாதுகாக்கும். சென்சிடிவ் ஸ்கின் உள்ளவர்களுக்கு சருமம் வெடிக்கவும் வாய்ப்பு உண்டு.

நீண்ட நேரம் நீடித்து இருக்கும்படியான லிப் பாமாக இருக்கிறதா என்று பாருங்கள். நம்மால் அடிக்கடி லிப் பாமை அப்ளை செய்து கொண்டே இருக்க முடியாது. அதனால் எப்போதும் லாங் லாஸ்டிங் லிப் பாமை தேர்வு செய்வது நல்லது. How to Choose Best Lip Balm

சில லிப் பாம்கள் 24 மணி நேரம் வரை லாங் லாஸ்டிங்காாக இருக்கும். அவற்றைத் தேர்வு செய்வது மிகச்சிறப்பு. அது நீண்ட நேரம் உங்கள் உதடுகளை ஹைட்ரேட்டிங்காக வைத்திருக்கும்.

நீண்ட நாட்கள் கெடாமல் பதப்படுத்த லிப் பாம்களில் பாரபீன் உள்ளிட்டவை சேர்க்கப்பட்டு இருக்கின்றன. இதுபோன்ற ரசாயனங்கள் உங்கள் உதடுகளை பாதிப்பது மட்டுமின்றி நிறைய ஆரோக்கியப் பிரச்சினைகளையும் ஏற்படுத்தும்.

சில லிப் பாம்கள் நன்கு உதடுகளுக்குப் புத்துணர்ச்சி தரும் பொருட்கள் சேர்க்கப்படுகின்றன. அவற்றை வாங்கியும் பயன்படுத்தலாம்.

குறிப்பாக பெர்ப்ர்மிண்ட், ரோஸ்ஆயில், மெந்தால் ஆகியவை சேர்க்கப்படுபவற்றை தேர்வு செய்வது உதடுகளுக்கு நல்ல புத்துணர்ச்சியும் குளிர்ச்சியும் தரும். அவற்றை வாங்கி பயன்படுத்துங்கள் என்று சருமநல மருத்துவர்கள் அறிவுறுத்துகிறார்கள்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share