கோடை வெயிலிலிருந்து உடலைப் பாதுகாத்துக்கொள்வது கொஞ்சம் சவாலான காரியம்தான். வெயிலில் அலைந்து திரிந்தால் உடல் சோர்வு, அதிக தாகம் – வியர்வை, தோல் சுருக்கங்கள் உண்டாவது… என பலவித பிரச்சினைகள் படையெடுக்கும்.
சிலருக்குத் தோலில் எரிச்சல், மயக்கம், உடல் வறட்சி, மூக்கில் சிறு கொப்பளங்கள், கண் எரிச்சல், அடி வயிற்றில் வலி, எரிச்சல் வலியுடன் மஞ்சள் நிறத்தில் சிறுநீர் பிரிவது, பாதத்தில் எரிச்சல் போன்றவையும் ஏற்படலாம். கோடை காலத்தில் ஏற்படும் இந்த உடல் உபாதைகளிலிருந்து தப்பிக்கச் சில எளிய வழிகள் இதோ…
தினமும் இரண்டு முதல் நான்கு லிட்டர் நீர் அருந்த வேண்டியது அவசியம். வெளியே செல்லும்போது ஒரு பாட்டில் நீரை எடுத்துச் செல்வது நல்லது.
காலை, மாலை இரு வேளையும் குளிக்கலாம். இது உடல் வெப்பநிலையைச் சீராக வைத்திருக்க உதவும். வியர்வையோடு இருக்கும்போது குளிக்காமல், சிறிது நேரம் கழித்துக் குளிக்கலாம்.
வாரம் ஒருமுறை தலைக்கு எண்ணெய் தேய்த்துக் குளிப்பது, உடல் வெப்பநிலையைச் சீராக வைத்திருக்க உதவும்.
பருத்தி ஆடைகளை அணியலாம். இதனால் வியர்வை எளிதாக வெளியேறும்; தோல் எரிச்சல் குறையும். How to care for health in summer?
அதிக உடல் சூட்டை ஏற்படுத்தும் துரித உணவுகளையும், மாமிச உணவுகளையும் தவிர்த்துவிடலாம். ஏற்கெனவே வெயிலின் தாக்கம் அதிகமாக இருப்பதால், இந்த உணவுகளால் உடலில் செரிமானம் பாதிக்கப்படும்.
மெல்லிய ஈரத்துணியை அடிவயிற்றிலும் கண்ணிலும் 20 முதல் 30 நிமிடங்கள் வைத்திருந்தால், அடி வயிற்றுவலி, கண் எரிச்சல் குறையும்.
முடிந்த வரை டீ, காபியைத் தவிர்த்துவிட்டு பழங்கள், பழக்கலவைகளைச் சாப்பிடலாம். டீயும் காபியும் உடல் சூட்டை அதிகரிக்கும். How to care for health in summer?
இரவு உறங்கச் செல்வதற்கு முன்னர் கண்களின் மேல் ஈரத்துணியைப் போட்டுக்கொள்ளலாம். இது எரிச்சலைக் குறைத்து, நன்றாகத் தூங்கவைக்கும்.
உறங்கச் செல்வதற்கு முன்னர் உள்ளங்கால், தொப்புளில் விளக்கெண்ணெய் வைப்பது சிறுநீர் எரிச்சல் மற்றும் சிறுநீர்த் தொற்று போன்றவற்றிலிருந்து பாதுகாக்கும். கால் கட்டை விரலிலும் விளக்கெண்ணெய் வைக்கலாம். How to care for health in summer?