பியூட்டி டிப்ஸ்: வியர்வையால் வேதனையா? விரட்டலாம் ஈஸியா!

Published On:

| By Selvam

நறுமணமிக்க சோப்பில் குளித்து வாசனை திரவியங்களைப் போட்டு வெளியில் வந்த அரை மணி நேரத்தில் அனைத்தையும் தூக்கி சாப்பிடும் அளவுக்கு வரும் வியர்வை வாசத்தைக் கட்டுப்படுத்த முடியாமல் திணறுபவர்கள் பலர் உண்டு. How to avoid sweating

அப்படிப்பட்டவர்கள் நாளொன்றுக்கு இரண்டு லிட்டர் தண்ணீர் குடிக்க வேண்டும். பருத்தி உடைகளையே அணிய வேண்டும். அதிக சூடான உணவுகளைத் தவிர்த்துவிட்டு, இளஞ்சூடான உணவுகளைச் சாப்பிடவும்.

காரம் நிறைந்த உணவுகள், அசைவ உணவுகள், எண்ணெயில் பொரித்த உணவுகளை அறவே தவிர்க்க வேண்டும். பழச்சாறுகளை அருந்தலாம்.

வாரம் இருமுறை எண்ணெய் தேய்த்துக் குளிப்பது நல்லது. மதுப்பழக்கம், புகைப்பழக்கம் தவிர்க்க வேண்டும். அதிக பித்தம் காரணமாகத்தான் வியர்வை அதிகமாக வெளியேறுகிறது.

இதைத் தவிர்க்க முதல் நாள் இரவு 20 கிராம் தனியாவை 200 மில்லி தண்ணீரில் ஊறவைக்க வேண்டும். மறுநாள் அதை வடிகட்டி, பல் துலக்கிய பின்னர் அருந்தலாம்.

இனிப்பு, துவர்ப்பு, கசப்பு சார்ந்த உணவுகளுக்குப் பித்தத்தைக் கட்டுப்படுத்தும் தன்மை உண்டு என்பதால் அத்தகைய உணவுகளை உட்கொள்ளலாம்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share