அழகுக்காக எத்தனையோ பிரச்சினைகளுக்கு வழி கண்டுபிடித்துவிடும் சிலர், தலையில் இருக்கும் பேனையும் ஈரையும் போக்க சரியான வழி கிடைக்கவில்லையே என புலம்புவார்கள். இதற்கு முக்கிய காரணம், தவறான சில வழிமுறைகளைப் பின்பற்றுவதுதான்.
உதாரணத்துக்கு, சரிவரப் பராமரிக்காத தலையில்தான் பேன் வரும். முதலில், தலையில் ஓரிரு பேன் வந்து, பின்னர் அது முட்டை வைத்துப் பல்கிப் பெருகிவிடும். பேன் இருப்பவர் பயன்படுத்தும் சீப்பு மற்றும் துண்டு போன்றவற்றை மற்ற குடும்ப உறுப்பினர்கள் பயன்படுத்தினால், பேனானது அவர்களுக்கும் பரவ ஆரம்பித்துவிடும்.
இந்த நிலையில் எண்ணெய் வைக்காமல் கூந்தல் வறட்சியாக இருக்கும்போது பேன் சீப்பை வைத்து வாரக்கூடாது; தலைமுடி அதிகம் உடையும்.
அதேபோல, ஈரப்பதமாக இருக்கும் கேசமும் சீப்பைக் கொண்டு இழுத்தால் சேதமாகும், உடையும். எனவே, தலையில் எண்ணெய் வைத்து, பின்னர் பேன் சீப்பை வைத்து வாரலாம். தினமும் பேன் சீப்பில் தலையை வாரி வந்து, கொஞ்சம் கொஞ்சமாக பேனை எடுத்துவிடலாம்.
ஈர், பேன் வழக்கமான சீப்பில் வராது. பேனை பேன் சீப்பிலும், ஈர் இழுக்க நெருக்கமான பற்கள் கொண்ட ‘ஈர் உருவி’ என்ற (ஈருளி என்று அழைக்கப்படும்)’ சாதனத்தையும் பயன்படுத்தலாம். ஈர் உருவியைப் பயன்படுத்துவதற்கு முன்னரும், தலைக்கு எண்ணெய் வைக்க வேண்டியதுஅவசியம்.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
ஹெல்த் டிப்ஸ்: உடல்வலிக்கு ஒத்தடம் கொடுக்கலாமா?
கலவரம் ஸ்டார்ட் ஆயிடுச்சி : அப்டேட் குமாரு