தரமான ‘ஹேர் டை’தான் உபயோகிக்கிறோம் என்று சிலர் தொடர்ந்து பயன்படுத்தி வந்தாலும் சில நேரங்களில் சிலருக்கு முகத்தில் அரிப்பு ஏற்படும். அலர்ஜி உண்டாகும்… இதைத் தவிர்ப்பது எப்படி?
“ஹேர் டையின் விலையை வைத்து அதன் தரத்தை நிர்ணயிக்க முடியாது. மார்க்கெட்டில் புதிது புதிதாக ஹேர் டை அறிமுகப்படுத்தப்படும் நிலையில் ஹேர் டையில் ரசாயனக் கலவையும் மாறுபடும் என்பதால், சிலருக்கு அலர்ஜி ஏற்படுவதைத் தடுக்க முடியாது.
தோலில் அரிப்பு, தோல் நிறம் மாறுதல், புண் ஏற்பட்டால் உடனடியாக ஹேர் டை பயன்படுத்துவதை நிறுத்திவிடுவது நல்லது. குறைந்தது ஒரு மாதத்துக்கு ஹேர் டை பயன்படுத்தாமல் இருக்க வேண்டும். அதன் மூலம் ஒவ்வாமை ஏற்படுத்தியது ஹேர் டை தானா என்பது தெரிந்துவிடும்.
இது தவிர, ஹேர் ஆயில், முகத்துக்கான கிரீம் போன்றவையும் அதிக ரசாயனம் கலந்து தயாரிக்கப்படுவதால் அவையும், பக்க விளைவுகளை ஏற்படுத்தி விடுகின்றன. அதனால், நீங்கள் எதை உபயோகித்தாலும், அதை சில காலம் நிறுத்திப் பார்த்து சோதித்துக் கொள்ளுங்கள். சாதாரண தேங்காய் எண்ணெயை மட்டுமே பயன்படுத்துங்கள்.
மருதாணியைச் சேர்த்த எண்ணெயை சிலர் பயன்படுத்துவார்கள். அதுவும் சில நேரங்களில் அலர்ஜியை உருவாக்கலாம். அதனால் இதற்கான காரணத்தைக் கண்டுபிடித்து அதனைத் தவிர்க்க வேண்டும். அதிலும் பலன் கிடைக்கவில்லை என்றால், தோல் மருத்துவரிடம் சென்று பரிசோதனை செய்து கொள்வது நல்லது” என்கிறார்கள் தோல் நோய் சிறப்பு மருத்துவர்கள்.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
திருநெல்வேலி பற்றி வந்த நல்ல தகவல்: இந்தியாவிலேயே சிறந்த நகரமாம்!
தை மாத நட்சத்திர பலன்கள்: உத்திரட்டாதி
ரூ.310 … சாம்பியன்ஸ் டிராபிக்கு பாகிஸ்தான் டிக்கெட் விலை!
தை மாத நட்சத்திர பலன்கள்: பூரட்டாதி