ஹெல்த் டிப்ஸ்: 50 வயதுக்கு மேல் அதிகரிக்கும் தொப்பை… தவிர்ப்பது எப்படி?

Published On:

| By Selvam

50 வயதுக்கு மேல் ஆண் பெண் இருபாலருக்கும் தொப்பை விழும். அதற்குக் காரணம், தசைகளின் அடர்த்தி குறைவதுதான் என்கிறார்கள் பிட்னஸ் பயிற்சியாளர்கள்.

“இந்த தசை அடர்த்தி குறைவதால் கலோரிகளை எரிக்கும் தன்மையும் மந்தமாகும். அதனால்தான்  வருடந்தோறும் எடை அதிகரித்துக்கொண்டே போகும். அதனால் உடற்பயிற்சிகளை எக்காரணம் கொண்டும் தவிர்க்கவே கூடாது.

இந்த நிலையில் ஹாட் ஃபிளாஷஸ், மனநிலையில் தடுமாற்றங்கள், களைப்பு போன்ற அறிகுறிகள் இருந்தாலும் அவற்றை ஒதுக்கி வைத்துவிட்டு உடற்பயிற்சிகளைத் தொடர வேண்டியது அவசியம்.

முக்கியமாக, வேலையிடம், வீடு என எந்த இடத்திலும் 30 நிமிடங்களுக்கொரு முறை எழுந்து சில நிமிடங்கள் நடப்பது நல்லது” என்றும் அறிவுறுத்துகிறார்கள்.

மேலும், “குறைவாகச் சாப்பிடுங்கள்.. அரை வயிற்றுக்குச் சாப்பிடுவது சிறந்தது. முழுத் தானியங்கள், காய்கறிகள், பழங்கள் அவசியம் இருக்கட்டும்.

மட்டன், சிக்கன் போன்றவற்றுக்கு பதில் மீன் மற்றும் கடல் உணவுகளைச் சாப்பிடுங்கள். எண்ணெய் பயன்பாட்டைக் குறையுங்கள்.

இனிப்பு சாப்பிடுவதைக் கட்டுப்படுத்துங்கள். சிகரெட், ஆல்கஹால் பழக்கம் வேண்டாம்.

இதனால் இனி வரும் வயதுகளிலும் தொப்பை இல்லாத உடலைப் பெற முடியும்” என்று நம்பிக்கை அளிக்கிறார்கள்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

கிச்சன் கீர்த்தனா: கொள்ளு இட்லி

அமரன் படத்தை ஓடிடியில் ரிலீஸ் செய்ய தடை கோரி வழக்கு!

மெட்ராஸ் பிரெசிடென்ஸி கல்லூரி : சிறப்பு மாணவர்களுக்கான விடுதி கட்டடத்தை திறந்து வைத்த ஸ்டாலின்

கோவையில் 10 மாதத்தில் 1 லட்சம் வாகனங்கள் பதிவு… சாலைகள் அலறல்!

சிபில் ஸ்கோரில் வெளிப்படைத்தன்மை இல்லை : கார்த்தி சிதம்பரம் குற்றச்சாட்டு!