உடல், மனம் இரண்டையும் ஒருங்கிணைக்கும் மிகச்சிறந்த உடற்பயிற்சி ஸ்கிப்பிங். எடையைக் குறைக்க ஸ்கிப்பிங் எந்த அளவுக்கு உதவும்?
“ஸ்கிப்பிங் என்பது அடிப்படையில் நடைப்பயிற்சி, ஜாகிங், ட்ரெட்மில்லில் நடப்பது போன்ற ஒரு ‘ஏரோபிக்’ உடற்பயிற்சிதான். ஸ்கிப்பிங் (Skipping) செய்யும்போது தொடர்ந்து குதித்துக்கொண்டே இருப்பதால் உடலில் சேரும் கலோரிகள் வேகமாக எரிக்கப்படும். 100 ஸ்கிப்பிங் செய்தால் அதிகபட்சமாக 15-20 கலோரி வரை எரிக்க முடியும். இதனால் முக்கிய தசைகள் வலுவடையும்.
முக்கிய தசைகள் வலுவடையும்போது வயிற்றுப் பகுதியிலுள்ள தசையும் வலுவடைந்து அந்தப் பகுதியில் சேர்ந்திருக்கும் கொழுப்பு கரையத் தொடங்கும். இதனால் வயிற்றுப்பகுதியிலுள்ள தசைகள் வலுவடைந்து, இறுக்கமாகி, வயிற்றுப்பகுதியின் சுற்றளவு குறையத் தொடங்கும்.
நமது உடலில் அளவுக்கு அதிகமாகச் சேரும் கொழுப்பு வயிற்றுப்பகுதியில்தான் படியும். அங்கிருக்கும் கொழுப்பு கரைந்து வயிற்றின் சுற்றளவு குறைகிறது என்றால் உடல் எடையும் குறையும். வெயிட் லாஸ் செய்ய விரும்புபவர்களுக்கு ஸ்கிப்பிங் நல்ல சாய்ஸாக இருக்கும்.
ஆனால், ஸ்கிப்பிங் செய்வது என்பது நபருக்கு நபர் வேறுபடும். 20 வயதில் இருப்பவர்கள் 5 நிமிடங்களில் 500 முறை ஸ்கிப்பிங் செய்துவிட முடியும். அதுவே 30 வயதில் இருப்பவர்கள் 250 முறை செய்ய முடியும். 40 வயதில் இருப்பவர்கள் 100 முறை செய்யலாம்.
எனவே, எத்தனை முறை என்பதைவிட எவ்வளவு நேரம் செய்யலாம் என்று பார்க்க வேண்டும். ஐந்து நிமிடங்கள் ஸ்கிப்பிங் செய்துவிட்டு அடுத்த ஐந்து நிமிடங்கள் ஓய்வெடுக்க வேண்டும். மீண்டும் ஐந்து நிமிடங்கள் ஸ்கிப்பிங் செய்துவிட்டு அடுத்த ஐந்து நிமிடங்கள் ஓய்வெடுக்கலாம்.
இதுபோல ஒரு நாளைக்கு 30 முதல் 40 நிமிடங்கள் வீதம் வாரத்துக்கு ஐந்து அல்லது ஆறு நாள்கள் பயிற்சி செய்யலாம்.பயிற்சி அதிகரிக்க அதிகரிக்க ஸ்கிப்பிங்குக்கு நடுவே ஓய்வெடுக்கும் நேரத்தைக் கொஞ்சம் கொஞ்சமாக குறைத்துக்கொண்டே வரலாம்.
வார்ம் அப் பயிற்சிகள் செய்துவிட்டு ஸ்கிப்பிங் செய்ய வேண்டும். திடீரென்று ஸ்கிப்பிங் செய்ய ஆரம்பிக்கும்போது தசைகளில் வலி ஏற்படும். ஓரிரு நாள்களில் அந்த வலி தானாகவே சரியாகிவிடும். ஓரிரு நாட்களுக்குப் பிறகும் வலி நீடித்தால் மருத்துவரை அணுகி மூட்டில் ஏதேனும் பிரச்னை உள்ளதா என்று பார்க்க வேண்டும்.
மூட்டுவலி இருப்பவர்கள் ஸ்கிப்பிங் செய்தால் வலி அதிகரிக்கும். எனவே, சிகிச்சை எடுத்து வலியைக் குறைத்துவிட்டு, தசைகளை வலுப்படுத்தும் உடற்பயிற்சிகள் மூலம் அதை வலுப்படுத்திவிட்டு ஸ்கிப்பிங் செய்ய வேண்டும்.
வயதானவர்கள், கர்ப்பிணிகள் என அனைவருக்கும் ஏற்ற ஸ்கிப்பிங் பயிற்சிகள் உள்ளன. மருத்துவர் அல்லது பயிற்சியாளர்களை அணுகி அவரவருக்கு ஏற்ற ஸ்கிப்பிங் வகைகளை நிபுணர்களின் ஆலோசனை பெற்று செய்யலாம்.
ஸ்கிப்பிங் செய்யும்போது இறுக்கமான ஆடைகளை அணியக்கூடாது. சற்று தளர்வான ஆடைகளை அணிய வேண்டும். ஸ்கிப்பிங் செய்யும்போது தடுக்கி விழுந்துவிடாத வகையிலான ஆடைகளை அணிவது நல்லது.
வெறும் காலில் குதிப்பதால் சில நேரங்களில் வழுக்கிவிட வாய்ப்புள்ளது. எனவே, ஷூ அணிந்து ஸ்கிப்பிங் செய்வது நல்லது. நல்ல காற்றோட்டமான இடத்தில் ஸ்கிப்பிங் பயிற்சி செய்ய வேண்டும்” என்று அறிவுறுத்துகிறார்கள் உடற்பயிற்சியாளர்கள்.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
கிச்சன் கீர்த்தனா : இறால் தொக்கு தோசை
டிஜிட்டல் திண்ணை: நெல்லை, கோவை… இரண்டு மேயர்கள் மட்டும்தானா? தொடரும் ஹிட் லிஸ்ட்!
அடுத்த கைலாசா தீவு : அப்டேட் குமாரு
மீண்டும் முதல்வராகிறார் ஹேமந்த் சோரன்