வீட்டிலேயே ஃபேஸ் பேக் தயாரித்து போடும் பழக்கம் இப்போது அதிகரித்து வருகிறது. அப்படி ஃபேஸ் பேக்கை போடும்போது சில விஷயங்களை கவனத்தில் கொள்ளுங்கள்.
எப்போது ஃபேஸ் பேக் போட்டாலும் மிக அதிகமாக உலரவிட வேண்டாம். ஃபேஸ் பேக்கில் லேசான ஈரம் இருக்கும்போதே தண்ணீரை அதில் லைட்டாகத் தெளித்துக்கொள்ளுங்கள்.
ஒரு காட்டன் துணியை ஈரப்படுத்தி அதை வைத்து முகத்தில் இருக்கும் பேக்கை ஜென்டிலாகத் துடைத்தெடுங்கள். அப்போதுதான் முகத்தில் எவ்வித இரிட்டேஷனும் ஏற்படாது. அப்படி அல்லாமல் ஃபேஸ் பேக்கை கடுமையாகச் சுரண்டி எடுத்தால் சருமம் பாதிக்கப்பட்டு அதனால் எரிச்சல் உணர்வு உண்டாகும்.
எல்லாவற்றுக்கும் மேலாக, எந்த ஃபேஸ் பேக்காக இருந்தாலும் அதில் பொதுவாகச் சேர்க்கப்படும் பொருள்களில் ஏதாவது உங்களுக்கு அலர்ஜியை ஏற்படுத்தினால் அதை கட்டாயம் தவிர்க்க வேண்டும் என்பதை எப்போதும் நினைவில் கொள்ளுங்கள்.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
டாப் 10 நியூஸ் : ஜம்முவில் ராகுல் முதல் கொல்கத்தா போராட்டத்தில் கங்குலி வரை!
கிச்சன் கீர்த்தனா : மரவள்ளிக்கிழங்கு மசால் வடை
‘கோ பேக்’, ‘கம் பேக்’… – அப்டேட் குமாரு