தினமும் எழுந்து, அன்றாட வேலைகளைச் செய்து, அரக்கபரக்க அலுவலகத்துக்கு ஓடுகிறோம். மாலை வீட்டுக்கு வந்ததும் தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் பார்த்துவிட்டு அவ்வப்போது கிடைக்கிற உணவைச் சாப்பிட்டுவிட்டு இரவு தூங்குகிறோம்.
ஆனால், நாம் செய்யும் அன்றாட வேலைக்கு நடுவில் உடல்நலத்துக்கு முக்கியத்துவம் கொடுக்க மறந்துவிடுகிறோம். ஒருவர் ஆரோக்கியமாக இருக்க உடற்பயிற்சியுடன் உணவு பழக்கமும் அவசியம்.
அந்த வகையில்… “ஒவ்வொருவர் வீட்டிலும் எடை பார்க்கும் கருவி வைத்திருக்க வேண்டியது மிகவும் அவசியம். தினமும் காலையில் எழுந்ததும், எல்லா வயதினரும் தங்கள் எடை எவ்வளவு என்று பார்க்க வேண்டும். இப்படிப் பார்க்கும்போது உடல் எடை சற்று கூடியிருந்தால், நாள் முழுக்க நம் மனதில் அது நிழலாடும். அப்போதுதான் அன்று கொஞ்சம் கூடுதலாக உணவுக் கட்டுப்பாடு, உடற்பயிற்சி என்று கடைப்பிடித்து எடையைக் குறைக்க முயற்சி எடுக்க முடியும்.
ஒரே நேரத்தில் அதிகமாக சாப்பிடாமல் உணவை ஐந்து அல்லது ஆறு சிறிய பகுதிகளாகப் பிரித்துக்கொண்டு சாப்பிட வேண்டும். இப்படி சாப்பிடும்போது உடலின் வளர்சிதை மாற்ற விகிதம் (மெட்டபாலிசம் ரேட்) அதிகரிக்கும்.
மதிய உணவுக்குப் பிறகு 10-15 நிமிடங்கள் நடைப்பயிற்சி மேற்கொள்ளலாம். அதன்பிறகு 10 முதல் 20 நிமிடங்கள் சிறிது ஓய்வெடுக்கலாம்.
ஜங்க் ஃபுட், எண்ணெயில் பொரித்த உணவுகளை தவிர்க்க வேண்டும். மாதத்துக்கு ஒருமுறை அல்லது இரண்டு முறை என்ற அளவில் வைத்துக்கொள்வது நல்லது.
இரவு சாப்பிட்டதும் உடனே படுக்கச் செல்லக்கூடாது. 15 நிமிடங்கள் வாக்கிங் சென்றுவிட்டு வந்து, மீண்டும் உங்கள் எடை எவ்வளவு என்று பார்க்க வேண்டும்.
உணவு மற்றும் சிற்றுண்டியைக் குறிப்பிட்ட நேரத்தில் சாப்பிடும் வழக்கத்தை ஏற்படுத்திக் கொள்ள வேண்டும். உணவைத் தவறவிடுதலும், ஆரோக்கியமற்ற உணவை உண்ணுவதாலும், மன அழுத்தம், சோர்வு, உடல் நலக் குறைவு போன்ற பல்வேறு பாதிப்புகளுக்கு ஆளாக நேரிடும்.
காலை டிஃபன், மதியம் உணவு இடைப்பட்ட நேரத்தில் ஸ்நாக்ஸ், பழங்கள், காய்கறி சாலட் இரவு பாதி வயிறு உணவு எனப் பட்டியலிட்டு உரிய நேரத்தில் ஊட்டமான உணவை உட்கொண்டால், நோய் நம்மை நெருங்காது. நீண்ட ஆயுளுடன் நிம்மதியாக வாழலாம்” என்கிறார்கள் டயட் கவுன்சிலர்கள்.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
தோனி பாணியில் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்றார் கேதர் ஜாதவ்
உங்க அக்கப்போருக்கு ஒரு அளவே இல்லையா? அப்டேட் குமாரு
டிஜிட்டல் திண்ணை: நம்பிக்கையில் இந்தியா, படபடப்பில் பாஜக… கவுன்ட்டிங் க்ளைமேக்ஸ்!
ரூ.4 கோடி பறிமுதல் வழக்கு: கேசவ விநாயகனுக்கு உயர்நீதிமன்றம் கேள்வி!