பியூட்டி டிப்ஸ்: லேடீஸ் ஸ்பெஷல் – முகத்தில் முடிகள்… வராமல் தடுப்பது எப்படி?

Published On:

| By Minnambalam Desk

“இன்றைய காலகட்டத்தில் சிறு வயதிலேயே பெண் பிள்ளைகளுக்கு முகத்தில் முடிகள் வளர்ந்து விடுகின்றன. அதற்குக் காரணம், அவர்களின் உணவு பழக்கம்தான்” என்கிறார்கள் அழகுக்கலை நிபுணர்கள். How can women prevent facial hair?

மேலும், “இந்த பிரச்சினை வராமல் தடுக்க எண்ணெய் பதாரத்தங்களை தவிர்க்க வேண்டும். முக்கியமாக உணவில் இயற்கை உணவுகள் சிலவற்றை எடுத்துக்கொள்ள வேண்டியது அவசியம்.

அதற்கு ஒமம், சதக்குப்பை, பெருஞ்சீரகம் வைத்து ஒரு பொடி உதவும். ஓமம், சதக்குப்பை, பெருஞ்சீரகம் ஆகிய மூன்றையும் வறுத்து பொடி செய்து தண்ணீரில் கொதிக்க விட்டு தேன், கருப்பட்டி, நாட்டுச்சர்க்கரை, எலுமிச்சைச்சாறு சேர்த்து குடிக்கலாம். ஒரே மாதத்தில் நல்ல முன்னேற்றத்தை காணலாம்.

அடுத்து, குளிப்பதற்கு சில மூலிகைகளை பயன்படுத்தலாம். அதற்காக  வசம்பு, மஞ்சள் இரண்டையும் வறுத்து பொடி செய்து அத்துடன் படிகார நீர், குப்பைமேனிச் சாறு, எலுமிச்சைச் சாறுடன் சேர்த்து குளிக்கலாம்.

பேஸ்பேக் மாதிரி முகத்தில் போட்டு ஒரு 2 மணி நேரம் கழித்து கழுவலாம். முடிகள் உதிரும் மற்றும் முகம் பொலிவாக இருக்கும்” என்கிறார்கள்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share