தலைக்கு எண்ணெய் தடவுவது தேவையற்றது என்ற கருத்து சமீபகாலமாக அதிகரித்து வருகிறது. எண்ணெய்க் குளியல் எடுப்பது குறைந்தது போலவே, எண்ணெய் தடவுவதும் குறைந்து வருகிறது. உண்மையில், தலைமுடிக்கு எண்ணெய் அவசியமா?
கூந்தலுக்கு எண்ணெய் தடவுவது என்பது கூந்தல் ஆரோக்கியத்துக்கான அடிப்படையான விஷயம் என்பதில் மாற்றுக்கருத்தே இல்லை. எப்போது தடவு கிறோம், எத்தனை நாள்களுக்கொரு முறை தடவுகிறோம், எத்தனை மணி நேரம் அதை வைத்திருக்கிறோம் என்பது அவரவர் கூந்தலின் தன்மையைப் பொறுத்து முடிவு செய்யப்பட வேண்டும்.
எண்ணெய்ப்பசையான கூந்தல், வறண்டு, உடையும் கூந்தல், சாதாரண கூந்தல் என கூந்தலின் தன்மையை மூன்று வகைகளாகப் பிரிக்கலாம். எண்ணெய்ப் பசையான கூந்தலுக்கு அடிக்கடி எண்ணெய் தடவ வேண்டியதில்லை. இவ்வகை கூந்தல் உள்ளவர்கள் எண்ணெய் வைத்தால், அது முகத்தில் வழிந்து, பருக்களை ஏற்படுத்தலாம். எண்ணெய் தடவிய உடனேயே தலைக்குக் குளித்துவிடலாம்.
சாதாரண கூந்தல் உடையவர்கள், தலையில் எண்ணெய் தடவி, ஒரு மணி நேரம் ஊறிய பிறகு மைல்டான ஷாம்பூ உபயோகித்து அலசிவிடலாம். அதுவே வறண்டு, உடையும் கூந்தலை உடையவர்கள், மைக்ரேன் எனப்படும் ஒற்றைத் தலைவலி, வீஸிங் பிரச்னைகள் இல்லாதபட்சத்தில், முதல் நாள் இரவே தலைக்கு எண்ணெய் தடவிக் கொள்ளலாம். மறுநாள் மைல்டான ஷாம்பூ உபயோகித்து அலசிவிடலாம்.
எந்த வகையான கூந்தலுக்கும், தலையில் எண்ணெய் வைத்துக்கொண்டு வெளியே செல்ல வேண்டாம். எண்ணெய் வைப்பதை அறவே தவிர்க்கவும் வேண்டாம்.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
கிச்சன் கீர்த்தனா: தோசைக்காய்ச் சட்னி
ரீ ரிலீஸ் அலப்பறைகள்: அப்டேட் குமாரு
பியூட்டி டிப்ஸ்: கோடையிலும் உங்கள் சருமம் பளபளக்க…
ஹெல்த் டிப்ஸ்: உங்கள் மூளையை உற்சாகமாக வைத்திருக்க… இதோ ஈஸி வழிகள்!