அழகை விரும்பாத மனிதர்களே இருக்க முடியாது. அதுவும் அழகான முகத்தைப் பெற எல்லோருக்குமே ஆசை உள்ளது.
பலர் அழகாக இருக்க வேண்டும் என்பதற்காக ரசாயனம் கலந்தக் கலவைகளை முகத்தில் பூசுகின்றனர். இதனால் முகம் பொலிவுப் பெறுகிறதோ இல்லையோ சருமம் பாதிப்புக்கு உள்ளாகிறது.
சருமத்தைப் பாதுகாக்க இனி கண்ட கண்ட கிரீம்களை பயன்படுத்தாமல் நம்மிடம் இருக்கும் மூலிகைகளைக் கொண்டு குளியல் பொடி தயாரித்து மேனி அழகைப் பாதுகாக்கலாம்.
ஆவாரம்பூ – 150 கிராம் (காய வைத்தது), செம்பருத்திப்பூ – 15 (காய வைத்தது), மரிக்கொழுந்து – 100 கிராம் (காய வைத்தது), பன்னீர் ரோஜா கால் கிலோ, எலுமிச்சை தோல் – 150 கிராம் (காய வைத்தது), வெட்டிவேர் – 100 கிராம், கோரைக்கிழங்கு – 50 கிராம், வசம்பு 50 கிராம், மகிழம்பூ – 100 கிராம், பாசிப் பயறு – கால் கிலோ, பூலான் கிழங்கு 100 கிராம், கார்போக அரிசி – 100 கிராம்.
ஆவாரம்பூ, செம்பருத்தி, மரிக்கொழுந்து, பன்னீர் ரோஜா, எலுமிச்சை தோல், வெட்டிவேர், மகிழம்பூ இவற்றை தண்ணீரில் அலசிக் கொள்ளவும்.
பின் காட்டன் துணியில் போட்டு நன்றாக வெயிலில் ஈரம் போக காயவைத்துக் கொள்ளவும். பின்பு கோரைக் கிழங்கு, வசம்பு, பாசிப்பயறு, பூலான் கிழங்கு, கார்போக அரிசி இவற்றை நன்றாக காயவைத்துக் கொள்ளவும்.
காய்ந்த பிறகு அனைத்துப் பொருட்களையும் ஒன்றாகச் சேர்த்து அரைத்து எடுத்துக் கொள்ளவும்.
இதைப் பெண்கள் மட்டும் உபயோகப்படுத்தினால் மஞ்சள் சேர்த்துக் கொள்ளலாம். ஆண்கள் பயன்படுத்துவதாக இருந்தால் மஞ்சள் சேர்க்க வேண்டாம்.
இந்தப் பொடியை ரோஸ் வாட்டர் அல்லது தயிர் அல்லது தண்ணீருடன் சேர்த்து மிக்ஸ் செய்து ஒரு அரை மணி நேரம் அப்படியே வைத்திருக்கவும். கால் மணி நேரம் கழித்து இதைப் பயன்படுத்தலாம்.
சோப்புப் போட்டு குளித்தப் பின் இந்தக் குளியல் பொடியை போட்டுக் குளிக்கலாம் அல்லது சோப்பு சேர்க்காமலும் இந்தப் பொடியை வைத்து மட்டுமே குளிக்கலாம்.
இந்தக் குளியல் பொடியைப் பயன்படுத்திக் குளிப்பதன் மூலம் சொறி, சிரங்கு குணமாகும். முகத்தில் இருக்கும் கரும்புள்ளிகள், பருக்கள் போன்றவை நீங்கி முகம் பளப்பளக்கும்.
ஆவாரம் பூ சருமத்தில் உள்ளக் கருமை நிறத்தைப் போக்கி, சீரான நிறத்தைக் கொடுக்கும். பாசிப்பயறு முகத்திற்கு அழகைக் கூட்டுவதற்கு உதவும். வியர்வை நாற்றத்தைக் குறைக்கவும் இந்தக் குளியல் பொடி உதவும்.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
டாப் 10 நியூஸ் : தவெக அரசியல் பயிலரங்கம் முதல் அமரன் இசை வெளியீட்டு விழா வரை!
கிச்சன் கீர்த்தனா : கவுனி அரிசி அல்வா
‘உங்க கோயிலுக்கு வர்றோம்’- சல்மான் முன்னாள் காதலி பிஷ்னோயிடத்தில் உருக்கம்!
6 மாவட்டங்களில் கனமழை….வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை!
அப்பாவு பேசியது எப்படி அவதூறாகும்?: அதிமுக நிர்வாகிக்கு ஐகோர்ட்டு கேள்வி!