அறிமுகமானது Honor Magic Vs 2 ஃபோல்டபுள் ஸ்மார்ட் போன்!

Published On:

| By christopher

Honor smartphone Magic Vs 2

முதன்முதலில் சாம்சங் நிறுவனம் தான் ஃபோல்டபுள் ஸ்மார்ட் போன்களை அறிமுகப்படுத்தியது அன்று முதல் இன்றுவரை ஃபோல்டபுள் போன் மீது அனைவருக்கும் ஒரு ஈர்ப்பு உண்டு. காலங்கள் மாற மாற வேறு சில நிறுவனங்களும் ஃபோல்டபுள் ஸ்மார்ட் போன்களை அறிமுகப்படுத்த தொடங்கிவிட்டன.

இந்த நிலையில் சீனாவை சேர்ந்த Honor நிறுவனம் Magic Vs 2 என்ற மடக்கும் வகையிலான ஸ்மார்ட் போனை  அறிமுகப்படுத்தியுள்ளது. இது 12GB ரேம் 256GB ஸ்டோரேஜ் மற்றும் 16GB ரேம் 512GB ஸ்டோரேஜ் ஆகிய இரண்டு வேரியண்ட்களில் கிடைக்கிறது.

Honor smartphone Magic Vs 2

இந்த Honor Magic Vs 2 ஸ்மார்ட் போன் க்ளாசியர் ப்ளூ, மிட்நைட் ப்ளாக், வைலட் கோரல் போன்ற நிறங்களில் அறிமுகமாகியுள்ளது. ஆன்ராய்டு 13 பேஸ்டு மேஜிக் ஓஎஸ் 7.2 அடிப்படையில் இயங்குகிறது மற்றும் octa-core Qualcomm Snapdragon 8+gen 1 SoC ப்ராசசரைக் கொண்டுள்ளது.

Honor Magic Vs 2 ஸ்மார்ட் போனின் ரெஃப்ரெஷ் ரேட் ஆனது 120Hz ஆகவும், 7.92 இன்ச் OLED இன்னர் டிஸ்ப்ளே மற்றும் 6.43 இன்ச் OLED கவர் டிஸ்ப்ளே கொண்டுள்ளது. அதுமட்டுமின்றி 1600 நிட்ஸ் பீக் பிரைட்னஸ் கொடுக்கப்பட்டுள்ளது.

Honor smartphone Magic Vs 2

கேமராவை பொறுத்தவரை 50MP மெயின் கேமரா, 12MP அல்ட்ரா ஒய்டு கேமரா, 20MP டெலிபோட்டோ கேமரா என ட்ரிபிள் ரியர் கேமரா இடம்பெற்றுள்ளது.

66W சூப்பர் சார்ஜிங் வசதியுடன் கூடிய 5000mAh திறன் கொண்ட பேட்டரி வழங்கப்பட்டுள்ளது. Honor Magic Vs 2 ஸ்மார்ட் போன் 12GB ரேம் 256GB ஸ்டோரேஜ் இந்திய மதிப்பில் ரூ.79,000 என்ற விலையில் விற்பனையில் உள்ளது.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ்ஆப் சேனலில் இணையுங்கள்…

பவித்ரா பலராமன்

”லியோவில் சம்பவம் இருக்கு”: லோகேஷ் கனகராஜ் வைத்த வேண்டுகோள்!

INDvsPAK: களமிறங்கிய கில்… முதல் விக்கெட் வீழ்த்தி சிராஜ் பதிலடி!

 

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share