பியூட்டி டிப்ஸ்: நரையைப் போக்கும் ஹோம்மேடு ஹென்னா பேக்!

டிரெண்டிங்

இன்றைய தலைமுறையினருக்கு நரை, பொடுகு, கூந்தல் வளர்ச்சி என்பது பெரும் பிரச்சினையாக உள்ளது. இதைத் தடுக்க இந்த ஹென்னா பேக்கை வீட்டிலேயே தயாரித்துப் பயன்படுத்தலாம். நரை முடி உள்ளவர்கள் இதைப் பயன்படுத்தும்போது நல்ல நிறம் மாற்றம் கிடைக்கும். வயது வித்தியாசமின்றி எல்லாருக்கும் ஏற்றது இது.

“ஹென்னா பேக்கைத் தயாரிப்பதற்கு முதலில் ஓர் இரும்புக் கடாயில் 100 கிராம் அளவுக்கு ஹென்னா பவுடரை எடுத்துக்கொள்ளுங்கள். இதனுடன், ஒரு டீஸ்பூன் செம்பருத்தி இலை பவுடர் அல்லது செம்பருத்திப்பூ பவுடர் சேருங்கள். கேசத்துக்கு, நல்லதொரு சிவப்பு நிறத்தை விரும்புபவர்களுக்குச் செம்பருத்திப்பூ கொடுக்கும். அடுத்ததாக, இதனுடன் ஒரு டீஸ்பூன் அளவுக்கு நெல்லிக்காய் பவுடரைச் சேருங்கள். நெல்லிக்காய் பவுடர், நாட்டு மருந்துக் கடைகளில் கிடைக்கும். இது, முடியை கண்டிஷனிங் செய்வதோடு கருமையாக்கக்கூடிய ஆற்றலும் கொண்டது.

நெல்லிக்காய் பவுடரைச் சேர்த்த பிறகு, ஒரு டீஸ்பூன் கரிசலாங்கண்ணி பவுடரைச் சேருங்கள். கரிசலாங்கண்ணி, கூந்தலுக்கு நல்லதொரு கண்டிஷனராகச் செயல்படும் தன்மை கொண்டது. நரை முடி வராமல் தடுக்கும் ஆற்றலும் இதற்கு உண்டு. அடுத்ததாக, இக்கலவையில் ஒரு டீஸ்பூன் வில்வ இலைப் பவுடர் சேருங்கள். பொடுகுப் பிரச்சினை இருந்தாலோ, தலையில் சிறு சிறு கட்டிகள் வந்தாலோ அதற்கெல்லாம் வில்வ இலைப் பவுடர் நல்லதொரு தீர்வைத் தரக்கூடியது. கேசத்தைக் கருமையாக்கும் தன்மையும் இதற்கு உண்டு. செம்பருத்தி போலவே, இதுவும் கொழகொழப்புத் தன்மை கொண்டது.

பின்னர், எலுமிச்சையின் தோலைக் காயவைத்து அரைத்த பொடியை ஒரு டீஸ்பூன் அளவுக்கு, தயார் செய்திருக்கும் கலவையில் சேருங்கள். கூடவே, அதனுடன் இரண்டு டீஸ்பூன் எலுமிச்சைச் சாறு சேருங்கள். கூந்தல் வறண்டு போகாமல் இருக்க தயிர் மிகவும் உதவும் என்பதால், இரண்டு டேபிள்ஸ்பூன் அளவுக்குத் தயிரையும் இக்கலவையில் சேருங்கள்.

அடுத்ததாக, ஒரு டீஸ்பூன் அளவுக்கு முருங்கை இலை எண்ணெய் அல்லது முருங்கை விதை எண்ணெய் அல்லது ஆலிவ் ஆயில் அல்லது நல்லெண்ணெயை இதில் சேருங்கள். கடைசியாக, இக்கலவையில் நான்கைந்து சொட்டுகள் யூகலிப்டஸ் ஆயிலையும் சேருங்கள். யூகலிப்டஸ் ஆயிலானது ஜலதோஷம் வராமல் தடுக்கும் தன்மை கொண்டதோடு, ஸ்கால்ப்பில் இருக்கும் பொடுகையையும் போக்கக்கூடிய ஆற்றல் கொண்டது.

தேவையான பொருட்கள் அனைத்தையும் இவ்வாறு சேர்த்த பின், கலவையை நன்கு கலந்து விடுங்கள். இதில் தண்ணீரைக் கொஞ்சம் கொஞ்சமாகச் சேர்த்து, தலையில் ஹேர் பேக்காகப் போடும் அளவுக்குக் கலக்குங்கள். இந்தக் கலவையை ஒரு பத்து மணி நேரம் அப்படியே ஊறவிடுங்கள். இப்போது, உங்கள் கூந்தலுக்குத் தேவையான அளவுக்கு தேங்காய் எண்ணெய் அல்லது நல்லெண்ணெய் அல்லது ஆலிவ் ஆயில் அல்லது பாதாம் எண்ணெயை எடுத்து, ஸ்கால்பிலும் கேசத்திலும் அப்ளை பண்ணுங்கள்.

பின்னர், தயாரித்து வைத்திருக்கும் ஹென்னா பேக்கை எடுத்து ஸ்கால்பிலும் கேசத்திலும் நன்கு அப்ளை பண்ணுங்கள். முடியைக் கண்டிஷனிங் செய்வதற்காக இந்தப் பேக்கைப் பயன்படுத்துபவர்கள், பேக்கைப் போட்ட பிறகு 45 நிமிடங்கள் ஊறவிட்டு, பின்னர் தலைமுடியை அலசுங்கள். அதுவே, நரைமுடியைக் கலராக்க நினைப்பவர்கள், பேக்கை போட்ட பிறகு, 3, 4 மணிநேரம் ஊறவிட்டு, பின்னர் தலைமுடியை அலசுங்கள்.

மிகவும் மைல்டான ஷாம்பூவை கொஞ்சமாக எடுத்து தலையை அலசுவது நல்லது. கண்டிஷனர் பயன்படுத்துபவர்கள், ஸ்கால்ப்பில் அப்ளை செய்யாமல் கூந்தலில் மட்டும் அப்ளை செய்யுங்கள். கண்டிஷனரை அப்ளை செய்த இரண்டு, மூன்று நிமிடங்களில் அலசிவிடுங்கள்.

எல்லோரும் இந்த பேக்கைப் பயன்படுத்தலாம். நரை முடி உள்ளவர்கள் இதைப் பயன்படுத்தும்போது நல்ல நிறம் மாற்றம் கிடைக்கும். டையைத் தவிர்க்க நினைப்பவர்களுக்கு இது நல்லதொரு தேர்வாக இருக்கும். பொடுகை நீக்கி முடி வளர்ச்சியையும் அதிகப்படுத்தும்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

டிஜிட்டல் திண்ணை: தமிழிசைக்கு எதிராக அண்ணாமலையின் டெல்லி மூவ்!

சிறுத்தைய விட இதான் பயங்கரம் : அப்டேட் குமாரு

50ஆவது படம்… தீவிர புரமோஷன் வேலைகளில் விஜய் சேதுபதி

திமுக நாடாளுமன்றக் குழு தலைவராக கனிமொழி நியமனம்!

+1
0
+1
0
+1
0
+1
1
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *