பியூட்டி டிப்ஸ்: முகத்தில் மேஜிக் செய்யும் ஃபேஸ் பேக்… வீட்டிலேயே செய்யலாம்!

Published On:

| By christopher

Homemade Face Pack in Tamil

நம் உடலின் 90% பகுதி தோலால் மூடப்பட்டது. எனவே, வெயிலில் ஒருதடவை போய்விட்டு வந்தாலே சருமம் கருத்துவிடும். கட்டிகள் மற்றும் பருக்களும் வெயில் காரணமாக வரலாம்.

எண்ணெய்ப்பசை சருமம் உள்ளவர்களுக்கு, சருமத்துக்கு மேலாக எண்ணெய் வந்து படிந்திருக்கும். வெயிலில் அலையும்போது உடலின் நீர்ச்சத்தும் குறைய நேரிடலாம்.

இதனால் பருக்கள் வந்து அதன் காரணமாக கரும்புள்ளிகள் மற்றும் தழும்புகள் போன்றவையும் சருமத்தில் வர நேரிடலாம். இப்படிப்பட்ட பிரச்சினைகளை இயற்கை முறையில் சரி செய்ய உதவும் வழிகளை பியூட்டி தெரபிஸ்ட்ஸ் பகிர்ந்துள்ளனர்.

’’முல்தானிமெட்டி, அழகு சிகிச்சையில் முக்கியமான ஒரு பொருளாகச் செயல்படுகிறது. இது சருமத்தை இறுக்கமாக்குவதோடு சருமத்தில் உள்ள அழுக்குகளையும் நீக்கிவிடும். நம் சருமத்திற்கு நல்லதொரு புத்துணர்ச்சியையும் கொடுக்கும்.

ஒரு பவுலில் மூன்று டீஸ்பூன் அளவுக்கு முல்தானிமெட்டி பவுடரை எடுத்துக்கொள்ளுங்கள். இதில் ஒரு டீஸ்பூன் அளவுக்குத் தூய்மையான சந்தனத்தூளைச் சேருங்கள். சந்தனக் கட்டையையும் இழைத்து இதில் சேர்க்கலாம். சந்தனம் உடலுக்குக் குளுமை அளிக்கும். முகத்தையும் டாலடிக்க வைக்கும்.

அடுத்து, தக்காளி ஒன்றை எடுத்து அதன் தோலை நீக்கிவிட்டு சதைப் பகுதியை மட்டும் மிக்ஸியில் அரைத்து சாறு எடுத்துக்கொள்ளுங்கள்.

இந்தத் தக்காளிச் சாற்றை தேவையான அளவுக்கு எடுத்து, முல்தானிமெட்டி மற்றும் சந்தனத்தூள் ஆகியவற்றுடன் கொஞ்சம் கொஞ்சமாகச் சேர்த்து ஸ்மூத்தான பேஸ்ட் போலத் தயாரித்துக்கொள்ளுங்கள்.

தக்காளிச் சாற்றில் வைட்டமின் சி அதிகமாக உள்ளது. இதிலுள்ள லைக்கோபின் (Lycopene) என்ற ஆன்ட்டிஆக்சிடன்ட் சருமத்திற்கு மிக நல்லது. சருமத்தில் இருக்கும் அதிகப்படியான எண்ணெய் மற்றும் தழும்புகளை இது குணப்படுத்தும்.

ஃபேஸ் பேக்கைத் தயாரித்த பின்னர், இதைக் கொஞ்சம் கொஞ்சமாக எடுத்து முகத்தில் கீழிருந்து மேல்நோக்கி அப்ளை பண்ணுங்கள். இப்படி அப்ளை பண்ணும்போதே சில்லென்று உணர்வீர்கள்.

10, 15 நிமிடங்களுக்கு அப்படியே விடுங்கள். பின்னர், பேக்கை ஈரம் தொட்டுத் துடைத்து எடுத்துவிட்டுப் பார்த்தால் முகம் ஃபிரெஷ்ஷாக, பளிச்சென்று இருக்கும்.

அன்றைய தினம் ஏற்பட்ட முகக்கருமை அத்தனையும் நீங்கியிருக்கும். அதுமட்டுமல்லாமல் உங்களுடைய சருமமும் புதிதானதுபோலத் தோற்றமளிக்கும்.”

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

கிச்சன் கீர்த்தனா : புளிக் கத்திரிக்காய்

கட்சிக் கொடி ஆன்லைன்ல ரிலீஸ்… அப்டேட் குமாரு

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிக்கும் அமீர் கான்?

இசிஆர் சாலைப் பணிகள்… அமைச்சர் எ.வ.வேலு ஆய்வு!

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel