கோடைக்காலத்தில் வெப்பத்தின் தாக்கத்தால் சிலருக்கு சொட்டு சொட்டாக சிறுநீர் வெளியேறும். இந்தப் பிரச்சினைக்கு எளிய தீர்வு இதோ…
ஒரு கைப்பிடி பாலக் கீரையை நன்றாகச் சுத்தப்படுத்தி ஆய்ந்து எடுத்துக் கொள்ளவும். ஒரு பாத்திரத்தில் 500 மில்லி தண்ணீர் ஊற்றி அதில் ஆய்ந்து வைத்துள்ள பாலக் கீரை, 10 கிராம் சீரகம், சிறிதளவு மஞ்சள்தூள் ஆகியவற்றைச் சேர்த்து நன்றாகக் கொதிக்க வைக்கவும். நன்கு கொதித்து அதை 150 மில்லி அளவாகச் சுண்டச் செய்து இறக்கி வைத்து வடிகட்டிக் கொள்ளவும்.
தினமும் காலை மற்றும் மாலை என இரண்டு வேளையும் இதைத் தயார் செய்து குடித்து வரவும். இந்தக் கசாயம் சொட்டுச் சொட்டாகச் சிறுநீர் வெளியேறும் பிரச்சினையைத் தீர்த்து சிறுநீர்ப்பையை வலுப்படுத்த உதவும். மேலும், மேற்கூறிய குறைபாட்டினால் பாதிக்கப்பட்டவர்கள் இரவு படுக்கப்போகும் முன் இரண்டு வெற்றிலை, இரண்டு மிளகு, ஐந்து உலர் திராட்சை ஆகிய மூன்றையும் சேர்த்து தினமும் படுக்கப்போகும் முன் வாயில் போட்டு மென்று தின்று விழுங்கவும்.
வெயில் கடுமையாக இருக்கும் நேரத்தில் அனைத்து காய்களையும் , கீரைகளையும் நீராவியில் வேகவைத்து உணவாகச் சாப்பிட்டு வந்தால் சொட்டு சிறுநீர் பிரச்சினைக்கு நல்ல தீர்வு கிடைக்கும். பச்சை மிளகாய்க்கு மாற்றாக இஞ்சியையும் காய்ந்த மிளகாய்க்கு மாற்றாக மிளகையும் பயன்படுத்துவதும் சிறந்தது.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
சண்டே ஸ்பெஷல்: மீன்பிடி தடை காலத்தில் நல்ல மீன்கள் வாங்குவது எப்படி?
நடராஜனின் பந்துவீச்சில் பதுங்கிய டெல்லி… அபார வெற்றி பெற்ற சன்ரைசர்ஸ்!
டிராவிஸ் அதிரடியில் நிலைகுலைந்த டெல்லி… சாதனை படைத்த ஐதராபாத்!
தமிழ்நாட்டில் பதிவான வாக்குகள் : எங்கு குறைவு? எங்கு அதிகம்? – முழு விவரம்!