பியூட்டி டிப்ஸ்: பொடுகு தொல்லையிலிருந்து விடுபட வீட்டிலேயே வைத்தியம்!

Published On:

| By Selvam

தலையில் ஏற்படும் வறட்சி, தலை குளித்துவிட்டு துவட்டாமல் போவது, தலையில் சோப்புத் தண்ணீர், ஷாம்பூ தங்கிவிடுவதால் உண்டாகும் அழுக்கு, அதிக எண்ணெய்ப் பசையுடன் இருத்தல், வியர்வை, நுண்ணுயிர்க் கிருமிகள், தோல் நோய்கள் போன்ற பல காரணங்களால் பொடுகு வருகிறது. மேலும், மன அழுத்தம், கவலையாலும் வரலாம்.

பொடுகு, பாக்டீரியாவால் ஏற்படுகிறது. முடியைச் சுற்றி பாக்டீரியா அரிப்பதால், தலையின் மேற்பரப்புத் தோலில் இறந்துபோன உயிரணுக்கள், செதில் செதிலாகத் தோன்றி அரிப்பை ஏற்படுத்தும். இந்தப் பொடுகு இருந்தாலே, பேன், ஈறுகள் வந்து தலையில் குடியிருக்கும்.

ஆரம்பத்திலேயே இதற்கு சிகிச்சை எடுத்துக்கொண்டால், பொடுகு தொல்லையிலிருந்து தப்பிக்கலாம் என்கிறார்கள் சித்த மருத்துவர்கள்…

ஒரு கப் மரிக்கொழுந்துடன், அரை கப் வெந்தயக்கீரையை அரைத்து, பேக் போல தலைக்குப் போட்டுக்கொண்டு, 10 நிமிடங்கள் கழித்து தண்ணீரில் நன்கு அலசினால், பொடுகு நீங்கி தலை சுத்தமாகிவிடும்.

வேப்பங்கொட்டைகளை அரைத்து விழுதாக்கி, தலையில் தேய்க்கவும் அரை மணி நேரம் கழித்து, தலைமுடியை நன்கு அலசிவிடவும்.

நல்லெண்ணெய் தேய்த்து தலையை வாரி, தலை முழுவதும் வேப்பங் கொழுந்தை அரைத்து தடவவும் போடவும்.  ஒரு மணி நேரம் கழித்து சீப்பால் வாரினால், பேன், ஈறு வெளியில் வந்துவிடும். பொடுகுத் தொல்லையும் மறையும்.

ஒரு கப் நல்லெண்ணெயுடன் ஒரு ஸ்பூன் மிளகை உடைத்துக் காய்ச்சி, வடிகட்டவும்.  இந்த எண்ணெய்யைத் தலை முழுவதும் விடவும்.  ஒரு காட்டன் துணியால் ஒற்றி எடுத்தால், பேன், பொடுகு வந்துவிடும்.  பிறகு, சின்ன சீப்பினால் வாரவும்.

வெந்தயப்பொடி, வேப்பம்பூ பொடி இவற்றைத் தலையில் தேய்த்துக் குளித்தால் பேன், பொடுகு, ஈறு தொல்லை இருக்காது.
வாரம் ஒரு முறை இந்த மருந்துகளைப் பயன்படுத்தினால், தலை சுத்தமாகும்.

வாரம் ஒரு முறை நல்லெண்ணெய் தேய்த்து, சீயக்காய் போட்டுக் குளிப்பது நல்லது. குழந்தைகளுக்குப் பேன் தொல்லை இருந்தால், வசம்பை அரைத்து தேங்காய் எண்ணெயில் போட்டுக் காய்ச்சி, தலையில் தடவிக் குளிப்பாட்டலாம்.

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

வேலைவாய்ப்பு : யுபிஎஸ்சி புதிய அறிவிப்பு!

Vikram: வீர தீர சூரன் ஆக மாறிய சீயான்… படத்தின் கதை இதுதானா?

ஆணவக் கொலை வழக்கில் தண்டனை பெற்ற யுவராஜ்-க்கு சிறையில் முதல் வகுப்பா?

பாஜகவின் கொள்கையே இதுதான் : எடப்பாடி பழனிசாமி தாக்கு!

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share