இது பனிகாலம். காலையில் 8 மணி வரை கூட வெளியே வர முடியாதபடி, கிராமங்களில் பனி கொட்டுகிறது. இந்த காலத்தில் நோய்க் கிருமிகள் அதிகம் பரவக் கூடும். Home remedies for wheezing problem
பனிக்காலத்தில் சளி, இருமல், தலைவலி, மூச்சுவிடுவதில் சிரமம் உள்ளிட்ட பாதிப்புகள் ஏற்படும். இதில் வீசிங் பாதிப்பு பலருக்கும் பெரிய பிரச்சினையாக இருக்கிறது. பனி காலத்தில் எங்கு சென்றாலும், இன்ஹெலர், ப்ளாஸ்கில் சுடு தண்ணீர் கட்டாயம் எடுத்துச் செல்ல வேண்டியிருக்கிறது.
மூச்சுத்திணறல் ஏற்படும் நேரத்தில் நெபுலைசர் (Neubuzilizer) வைத்து சரி செய்து கொள்ள வேண்டியிருக்கிறது.
இதுபோன்று மூச்சுதிணறல் பிரச்சனைக்கு ஒருசில வீட்டு வைத்தியங்களை பார்க்கலாம்.
சூடான தண்ணீர், தேநீர்
உங்கள் சுவாசக் குழாயில் சளி உருவாகும்போது பொதுவாக மூச்சுத்திணறல் ஏற்படுகிறது. சூடான திரவங்களை குடிப்பது மூச்சுவிடுவதை எளிதாக்கும். காற்றுப்பாதை அடைப்பைத் தடுக்கவும் உதவும்.
ஒரு மணி நேரத்துக்கு ஒரு முறை சூடான நீரை குடிக்கலாம். மூலிகை தேநீரும் உங்களுக்கு நிவாரணம் அளிக்கும்.
தேன்
தேனில் பாக்டீரியா எதிர்ப்பு மற்றும் அழற்சி எதிர்ப்பு பண்புகள் உள்ளன. இருமல் மற்றும் மூச்சுத்திணறலை ஏற்படுத்தும் பாக்டீரியாக்களை தடுக்கக் கூடியது. இது மூச்சு குழாய்களில் இருந்து சளியை நீக்குகிறது மற்றும் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது.
ஒரு டீஸ்பூன் தேனுடன் ஒரு சிட்டிகை இலவங்கப்பட்டை பொடியை கலந்து சாப்பிட்டால் மூச்சுத்திணறல் நீங்கும். சுடு நீரில் தேனை கலந்தும் குடிக்கலாம்.
ஆவி பிடித்தல்
மூச்சு விட சிரமம் ஏற்படும் இதுபோன்ற பனி காலங்களில், இரு நாளுக்கு ஒருமுறை தண்ணீரை கொதிக்க வைத்து ஆவி பிடிக்கலாம். அதில் தைலம் போன்ற பொருட்களை பயன்படுத்துவதை காட்டிலும், புதினா,துளசி இலைகளை பயன்படுத்தலாம். இது அழற்சி எதிர்ப்பு விளைவுகளை ஏற்படுத்தும்.
வெங்காயம்
வெங்காயத்தில் உள்ள சல்பர் கண்டெண்ட் தொற்றுகளை எதிர்த்து போராட உதவுகிறது. உங்கள் உணவில் சிறிது பச்சை வெங்காயத்தைச் சேர்த்து கொள்ளும் போது, நுரையீரலில் ஏற்படும் வீக்கத்தைக் குறைப்பதற்கும், காற்றுப்பாதைகளை திறந்து எளிமையாக மூச்சு விடுவதற்கு வழிவகுக்கும்.
கடுகு எண்ணெய்
கடுகு எண்ணெய் மூச்சுத் திணறலுக்கு உடனடி நிவாரணம் தருகிறது. சிறிது கடுகு எண்ணெயை சூடாக்கி அதில் ஒரு துண்டு கற்பூரத்தை சேர்த்து கரைக்கவும்.
இதை ஒரு நாளைக்கு 3 முறை 15 நிமிடங்களுக்கு நெஞ்சில் தேய்த்து மசாஜ் செய்ய வேண்டும். இது ரத்த ஓட்டத்தை மேம்படுத்துவதுடன் சுவாச மண்டலத்தை சுத்தப்படுத்துகிறது மற்றும் மூச்சு விடுவதை எளிதாக்குகிறது.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
உலகின் சிறந்த உணவு நகரங்கள்… முதலிடம் பிடித்த நகரமும் இந்தியாவில் உள்ள நகரங்களும்!
பியூட்டி டிப்ஸ்: தலையாய பிரச்சினைக்குத் தீர்வுகள் உண்டா?
விஜய்யின் டபுள் ஆக்ஷன்… டபுள் ட்ரீட்: G.O.A.T புது போஸ்டர்!
டாப் 10 செய்திகள்… இதை மிஸ் பண்ணாதீங்க!
Home remedies for wheezing problem