வெயில் காலத்தில் வியர்வையாலும், மழைக்காலத்தில் ஈரத் தன்மையாலும் அந்தரங்கப் பகுதிகளில் சிலருக்கு அரிப்பு வந்துவிடும். இந்தப் பிரச்சினைக்கு எளிய தீர்வு உண்டா?
“நாட்டு மருந்துக் கடைகளில் கடுக்காய் கிடைக்கும். அதை வாங்கி இடித்துக் கொள்ளவும். பவுடராக்க வேண்டாம். பாத்திரத்தில் நான்கைந்து லிட்டர் தண்ணீர் வைத்துக் கொதிக்கவிடவும். இடித்துவைத்துள்ள கடுக்காயில் கைப்பிடி அளவு எடுத்து அதில் சேர்த்து மீண்டும் கொதிக்கவிடவும். நீங்கள் உட்காரும் அளவுக்கு அகலமான டப் ஒன்று வாங்கிக் கொள்ளவும்.
கொதிக்க வைத்த கடுக்காய் நீரை, பொறுக்கும் சூட்டில் அந்த டப்பில் விட்டு, ஒரு டேபிள் ஸ்பூன் விளக்கெண்ணெயும் சேர்க்கவும். எப்சம் சால்ட் (மக்னீசியம் சல்ஃபேட்) என்று கடைகளில் கிடைக்கும். அதில் சிறிதளவு சேர்த்து, டப்பில் சிறிது நேரம் உட்கார்ந்து கொள்ளுங்கள். இதற்கு ‘சிட்ஸ் பாத்’ (Sitz Bath) என்று பெயர். சிட்ஸ் பாத் எடுத்து முடித்ததும் உடலை காட்டன் துணியால் மென்மையாகத் துடைக்கவும்.
அரிப்பு, பூஞ்சைத் தொற்று, யூரினரி இன்ஃபெக்ஷன் போன்றவற்றுக்கெல்லாம் இது தீர்வளிக்கும். தொடர்ந்து ஐந்து நாள்களுக்கு இப்படிச் செய்து வந்தாலே அரிப்பிலிருந்து விடுதலை கிடைக்கும். சிட்ஸ் பாத் எடுக்கவென்றே பிரத்யேக டப்புகள் கிடைக்கின்றன. அதை வாங்கிப் பயன்படுத்தலாம். சிட்ஸ் பாத் எடுக்கப் பயன்படுத்திய டப்பை முறையாகச் சுத்தப்படுத்தி, காயவைத்துப் பயன்படுத்தவும். மற்றவர்களுடன் அதைப் பகிர்ந்துகொள்ள வேண்டாம்” என்கிறார்கள் அரோமாதெரபிஸ்ட்டுகள்.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
கிச்சன் கீர்த்தனா: கற்பூரவல்லி கஷாயம்
சென்னை என்னும் பொண்டாட்டி: அப்டேட் குமாரு