வைட்டமின் ஏ, சி சத்துகள் நிறைந்த கேரட் ஜூஸ் குடிக்க, சரும செல்களுக்குப் புத்துணர்வு கிடைக்கும். புதிய செல்கள் உருவாக உதவும். Home Remedies for Glowing Skin
மது, சிகரெட், காபி, டீ தவிர்த்துவிட்டு, மூலிகை டீ குடித்துப் பழகலாம். எண்ணெய் உணவுகள், குளிர்பானங்கள் ஆகியவற்றைத் தவிர்க்கலாம்.
வெள்ளைச் சர்க்கரையை முற்றிலுமாகத் தவிர்த்துவிட்டு, இனிப்புத் தேவைக்கு தேனும், நாட்டுச்சர்க்கரையும் சேர்த்துக்கொள்ளலாம்.
வாரத்தில் மூன்று முறை மீன், முட்டை சாப்பிட்டு வரலாம்.
இரண்டு டீஸ்பூன் ஓட்ஸ் பவுடர், இரண்டு டீஸ்பூன் பாதாம் எண்ணெய், அரை டீஸ்பூன் ஆப்பிள் சிடர் வினிகர் கலந்து, முகத்தை நன்றாகக் கழுவிய பின் பூச வேண்டும். பிறகு, முகம் முழுதும் மென்மையாக ஸ்க்ரப் செய்ய வேண்டும். 10 நிமிடங்கள் கழித்து மிதமான நீரில் முகம் கழுவினால் உங்கள் முகம் பளிச்சென்று மின்னும்.
தினமும் மேக்கப் செய்பவர் என்றால் இரவில் டபுள் கிளென்சிங் செய்ய வேண்டியது மிக அவசியம். ஒருமுறை ஃபேஸ்வாஷ் செய்வது மட்டும் போதாது. உங்களுக்கு சருமத்தில் கருந்திட்டுகள் இருந்தாலோ, முதுமை தெரியக் கூடாது என நினைத்தாலோ, சருமம் வறண்டு போகாமலிருக்க விரும்பினாலோ சரும மருத்துவரின் ஆலோசனையின் பேரில் சீரம் உபயோகிக்கலாம். அதன் பிறகு மாய்ஸ்ச்சரைசர் உபயோகிக்க வேண்டும். இவையே போதுமானவை என்கிறார்கள் அழகுக்கலை நிபுணர்கள்.