கேசத்தை முறையாகப் பராமரிக்காவிட்டால் பலருக்கும் அது வறண்டு, பறந்து, படியாமல் நிற்கும். அதை ஃபிரிஸ்ஸி ஹேர் என்று கூறுவார்கள். இதை சரி செய்ய, கேசத்துக்குத் தேவையான ஊட்டத்தை எண்ணெய் அல்லது க்ரீம் மூலமாகக் கொடுக்கலாம். வீட்டிலேயே அதற்கான ஹோம் மேடு வழிமுறைகள் இதோ… Home Remedies for Frizzy Hair
கேச ஆரோக்கியத்துக்கு சூரியகாந்தி எண்ணெய் சிறந்தது. சாஃப்ளவர் ஆயில் (Safflower oil) அதனினும் சிறந்தது எனலாம். இது எல்லா டிப்பார்ட்மென்டல் ஸ்டோர்களிலும் கிடைக்கும். இந்த எண்ணெய், கேசத்தின் வறண்ட தன்மையைக் கட்டுப்படுத்தும், தூக்கி இருக்கும் கூந்தலை படிய வைக்கும். இதை மிதமாகச் சூடு செய்து தினமும் கேசத்திலும், ஸ்கால்ப்பிலும் (scalp) தடவி வர வேண்டும்.
சாஃப்ளவர் எண்ணெய் பயன்படுத்தியும் கேசம் சரியாகவில்லை எனில், பின்வருவதை முயன்று பார்க்கலாம். வாரம் இரு முறை, ஆலிவ் எண்ணெய், தேங்காய் எண்ணெய் இப்படி எது கிடைக்கிறதோ அதை கேசம் மற்றும் ஸ்கால்ப்பில் முழுவதும் அப்ளை செய்து, சில மணி நேரம் ஊறவிட வேண்டும். கொதிக்கும் நீரில் இரண்டு டீஸ்பூன் டீத்தூளைக் கலந்து அதனுடன் நான்கு, ஐந்து சொட்டுகள் எலுமிச்சைச் சாற்றைக் கலக்கவும். அப்படியே 10 நிமிடங்கள் விட்டால், நிறம் மாறும். பின்னர் அதை வடிகட்டி, ஸ்கால்ப்பில் இல்லாமல் கேசத்தில் மட்டும் தேய்த்து சில நிமிடங்கள் கழித்து மைல்ட் ஷாம்பூ பயன்படுத்திக் குளித்தால், முடி மிருதுவாகவும், பளபளப்பாகவும் மாறும்.
முதல் நாள் இரவு வெந்தயத்தைத் தண்ணீரில் ஊறவைத்து, மறுநாள் அதை நன்றாக அரைத்து, தயிர்/கற்றாழை ஜெல் கலந்து, தலையில் ‘பேக்’ ஆக அப்ளை செய்யவும். சில நிமிடங்களில் வெதுவெதுப்பான நீரில் கேசத்தை அலசினால், கேசம் பொலிவாக இருக்கும். வெந்தயம் கேசத்துக்கு நல்ல ஊட்டச்சத்து தரும்.
வெங்காயத்தை அரைத்து தலையில் அப்ளை செய்தால் முடி வளரும் என்பது தவறான நம்பிக்கை. வெங்காயத்தில் உள்ள சல்ஃபரை நேரடியாக கேசத்தில் அப்ளை செய்யும்போது பாதிப்பை ஏற்படுத்தும். பதிலாக, ஆனியன் சீடு எண்ணெயை (Onion seed oil) வாங்கி கேசத்தில் அப்ளை செய்து அலசினால் கேசத்தின் Frizzy தன்மை குறையும்.
செம்பருத்திப் பூ எளிதில் கிடைக்கக்கூடிய ஒன்று. அதில் நான்கு பூக்களை எடுத்து, கொஞ்சமாகத் தண்ணீர் ஊற்றிக் கொதிக்கவைத்தால், பூவின் நிறம் முழுவதும் அப்படியே தண்ணீரில் இறங்கிவிடும். கொதித்த செம்பருத்தியை அப்படியே அந்தத் தண்ணீருடன் சேர்த்து அரைத்து எடுத்தால் ஜெல் போல கிடைக்கும். முதலில் கேசத்தில் சிறிது எண்ணெய் வைத்து, அரைத்த செம்பருத்தியைக் கேசம் மற்றும் ஸ்கால்ப்பில் தடவி சிறிது நேரம் கழித்துக் குளித்தால், முடி பளபளப்பாக இருக்கும். இப்படி வாரம் ஒரு முறை செய்துவர, Frizzy தன்மை மாறிவிடும்.
மேலே கூறியுள்ளவை எல்லாம் புறக்காரணங்களால் கேசத்தில் ஏற்பட்ட வறட்சியை சரிசெய்யக் கைகொடுக்கும். ஊட்டச்சத்துக் குறைபாடு, மரபு போன்ற பிற உடல்நலன் சார்ந்த காரணங்களால் சேதமடைந்த கேசத்துக்கு மருத்துவ ஆலோசனையின் பேரில் தீர்வு பெறுவது நல்லது.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
கிச்சன் கீர்த்தனா: தூதுவளை ஸ்பாஞ்ச் தோசை
டாப் 10 செய்திகள்: இதை மிஸ் பண்ணாதீங்க!
ஐபிஎல் அணிகள் ஏலத்தில் போட்டி போட்டு வாங்கிய வீரர்களின் முழுப்பட்டியல்!
”ஆளுநரின் குற்றச்சாட்டு முற்றிலும் உண்மைக்கு புறம்பானது” : தங்கம் தென்னரசு
Home Remedies for Frizzy Hair