இன்று பலரும் ஜங்க் உணவு வகைகளையும், டைனிங் டேபிளில் வேக வேகமாகச் சாப்பிடுகிற பழக்கத்துக்கும் ஆளாகியிருக்கிறார்கள்.
அப்படிச் சாப்பிடும்போது தம்மை அறியாமல் நிறைய காற்றையும் சேர்த்தே விழுங்குகிறார்கள். அதனால் வாய்வு பிரிவதும் வயிற்று உப்புசமும் அதிகரித்து வருகிறது. இதைத் தவிர்க்க…
நாட்டு மருந்துக் கடைகளில் கிடைக்கும் சித்தரத்தை 5 கிராம், சுக்கு 5 கிராம், மிளகு 5 கிராம், திப்பிலி 5 கிராம், அக்கரகாரம் 5 கிராம் ஆகியவற்றை சுத்தப்படுத்தி நன்கு இடித்துக்கொள்ளவும்.
ஒரு பாத்திரத்தில் 750 மில்லி அளவு தண்ணீர் ஊற்றி அதில் இடித்துவைத்துள்ள பொருட்களையும் 2 சிட்டிகை மஞ்சள் தூளையும் தேவையான அளவு பனை வெல்லத்தையும் சேர்த்து நன்கு கொதிக்க வைக்கவும். நன்றாக கொதிக்க வைத்து 150 மில்லி அளவாக சுண்டியதும் இறக்கி வடிகட்டி குடிக்கவும்.
இந்த கஷாயத்தை காலை, மாலை என இரண்டு வேளையும் அல்லது ஒரு வேளையாகவோ குடித்து வரவும். இந்தக் கஷாயம் உடம்பிலுள்ள வாய்வுவை நீக்குவதோடு உடம்பு வலியையும் குணப்படுத்தும்.
மேலும் இரவு படுக்கப்போகும் முன் வெற்றிலை 5, மிளகு 2, உலர் திராட்சை 5 இவை மூன்றையும் சேர்த்து வாயில் போட்டு மென்று தின்று முழுங்கவும். Home Remedies for Flatulence problem
அத்துடன் அன்றாட உணவு முறையில் அனைத்து காய்களையும், கீரைகளையும் நீராவியில் வேகவைத்து சாப்பிட்டு வரவும். பச்சை மிளகாய்க்கு மாற்றாக இஞ்சியையும், காய்ந்த மிளகாய்க்கு மாற்றாக மிளகையும் பயன்படுத்தவும்.
ஆல்கஹால் அறவே தவிர்க்கப்பட வேண்டும். நிறைய தண்ணீர் குடிக்க வேண்டும். உடல் பருமன் காரணமாக வயிற்றுத் தசைகள் தளர்வாக இருந்தாலும் இந்தப் பிரச்சினை வரலாம் என்பதால் வயிற்றுத் தசைகளை கடினமாக்கும் பயிற்சிகளை மருத்துவரின் ஆலோசனைப்படி மேற்கொள்ளலாம்.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
ஹெல்த் டிப்ஸ்: எதற்கெடுத்தாலும் தைலம் தடவும் பழக்கம் உள்ளவரா நீங்கள்?
பியூட்டி டிப்ஸ்: விஸ்வரூபம் எடுக்கும் பொடுகுத்தொல்லை.. வீட்டிலேயே இருக்கு சிகிச்சை!
ஹெல்த் டிப்ஸ்: வெறும் வயிற்றில் உடற்பயிற்சி.. நல்லதா? கெட்டதா?
பியூட்டி டிப்ஸ்: எல்லாருக்கும் ஏற்றதா ஹைட்ரா பேஷியல்?
Home Remedies for Flatulence problem