பொதுவாக கோடைக் காலங்களில் வெயிலின் காரணமாக சிலருக்கு உதடுகள் உலர்ந்துவிடும். இதற்கு பலரும் லிப்ஸ்டிக், லிப் கிளாஸ் போன்ற செயற்கையான பொருட்களைப் பயன்படுத்துகின்றனர். இதைத் தவிர்த்து உதடுகளை வீட்டில் உள்ள பொருட்களை வைத்தே பராமரிக்கலாம் என்கின்றனர் அழகுக்கலை நிபுணர்கள்.
உருளைக்கிழங்கை தோல் நீக்கி துண்டுகளாக நறுக்கியோ அல்லது துருவியோ சாறு எடுத்துக் கொள்ளுங்கள். தூய்மையான பஞ்சை உருளைக்கிழங்கு சாற்றில் நனைத்து உதட்டின் மீது இரவு படுக்க செல்லும் முன் தடவவும். Home Remedies for Dry lips
இதை தொடர்ந்து செய்தால் சில வாரங்களில் நல்ல மாற்றத்தைக் காணலாம். உருளைக்கிழங்கு சாற்றில் அதிக அளவு வைட்டமின்கள் ஏ, பி மற்றும் சி இருப்பதால் உதட்டின் வறட்சியை நீக்குவதில் முக்கிய பங்காற்றுகிறது.
அதே போல எலுமிச்சை துண்டுகளை சர்க்கரையில் நனைத்து பயன்படுத்துவது உதட்டைப் பராமரிக்க உதவுகிறது.
எலுமிச்சை பழத்தை சிறிய துண்டுகளாக நறுக்கி சர்க்கரையில் நனைக்க வேண்டும். பின் அதை உங்கள் உதட்டின் மீது மென்மையாக 5 நிமிடங்களுக்கு மசாஜ் செய்யவும். இதை தொடர்ந்து செய்து வந்தால் ஒரு சில வாரங்களில் நல்ல மாற்றங்களை பெற முடியும்.
ஆரஞ்சுபழத் தோலை உலர்த்தி பொடி செய்து தயிருடன் கலந்து பயன்படுத்தினாலும் உதட்டில் நல்ல மாற்றங்களைக் காணலாம். கோடையில் ஏற்படும் வறட்சியைத் தவிர்க்கலாம். Home Remedies for Dry lips