Home remedies for cracked heels

பியூட்டி டிப்ஸ்: பாத வெடிப்புக்கு குட் பை சொல்லலாம்!

டிரெண்டிங்

வெடிப்புகள் இல்லாத வழுவழு பாதம் எல்லோரும் விரும்புவதுதான். ஆனால், பாத வெடிப்பு இங்கு பலரும் சந்திக்கும் பிரச்சினை. கேசம், சருமத்துக்குக் கொடுக்கும் முக்கியத்துவத்தை பாதத்துக்குக் கொடுப்பவர்கள் மிகக் குறைவு. Home remedies for cracked heels

இப்படி கவனிக்கப்படாமல் விடுவதாலேயே பாத வெடிப்பு பிரச்சினை நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே போகும்.

இதைத் தவிர்ப்பது எப்படி? பாத வெடிப்பை சரி செய்வதற்கான வழிமுறைகள் உண்டா?

பாதங்களில் ஏற்படும் வெடிப்புக்கு மிக முக்கியக் காரணம், உடலில் நீர்ச்சத்து குறைவாக இருப்பதுதான். எனவே, அதிக அளவு தண்ணீர் குடிக்க வேண்டும்.

குறிப்பாக, கோடையில் உடலில் நீர்ச்சத்து இழப்பு ஏற்படாமல் பார்த்துக்கொள்ள வேண்டும். பாதங்களில் ஏற்படும் வெடிப்பை வீட்டிலேயே எளிய முறையில் சரி செய்வதற்கான மூன்று விதமான வழிமுறைகளை இங்கு பார்க்கலாம்…

முதலில், பாதங்களை வைக்கக்கூடிய அளவுக்கு ஓர் அகன்ற பாத்திரத்தில் தண்ணீர் எடுத்துக்கொண்டு, சிறிதளவு வெள்ளை வினிகர் ஊற்றி, அதில் பாதங்களை 10 நிமிடங்கள் ஊற வைக்கவும்.

அடுத்து கருங்கல் அல்லது பியுமிஸ் ஸ்டோன்(Pumice Stone) கொண்டு வெடிப்பு இருக்கும் பகுதிகளில் நன்றாகத் தேய்க்கவும். இதன் மூலம் பாதத்தில் உள்ள இறந்த செல்கள் நீங்கிவிடும்.

பின்னர் மிதமான சூட்டில் உள்ள வெந்நீரை அகன்ற பாத்திரத்தில் ஊற்றி, பாதங்களை அதில் சிறிது நேரம் வைத்திருந்து, கழுவிய பின், நன்றாகத் துடைத்துவிட்டு ஆலிவ் ஆயில் அப்ளை செய்து, நடக்காமல் ஓய்வெடுக்கவும்.

இதுபோல அடிக்கடி செய்துவர பாத வெடிப்பு குறையும்.

அவகடோ, வாழைப்பழம் இரண்டிலும் உடலில் நீர்ச்சத்தை அதிகப்படுத்துவதற்கான சத்துகள் நிறைந்துள்ளன. மேலும், வெளிப்பூச்சில் அவை சருமத்தின் ஈரப்பதத்தை மீட்கும்.

அவகடோ ஒன்று, வாழைப்பழம்  இரண்டு… இவை இரண்டையும் தோல்களை நீக்கிவிட்டு சிறிது சிறிதாக வெட்டிக்கொள்ளவும். பின்னர் இரண்டையும் ஒன்றாகச் சேர்த்து அரைத்துக்கொள்ளவும்.

இந்தக் கலவையை பாதம் முழுவதும் தடவி 10 முதல் 15 நிமிடங்கள் வைத்திருந்து பின் கழுவவும். இதேபோன்று வாரத்துக்கு ஒருமுறை செய்து வந்தால் மெல்ல மெல்ல பாத வெடிப்புக் குறைந்து, முழுமையாக குணமடைந்துவிடும்.

பூசணிக்காயை சிறிது சிறிதாக வெட்டி தண்ணீரில் வேகவைத்து எடுத்துக்கொள்ளவும். வேகவைத்து எடுத்த பூசணிக்காயை மிக்ஸியில் அரைத்து, அந்த பேஸ்ட்டை தனியாக எடுத்து வைத்துக்கொள்ளவும்.

கடைகளில் இது Pumpkin Pure என்ற பெயரில் ரெடிமேடாகவும் கிடைக்கும். பூசணி பேஸ்ட்டுடன் பாதாம் எண்ணெய் ஒரு டீஸ்பூன், எலுமிச்சைச் சாறு ஒரு டீஸ்பூன், நாட்டுச்சர்க்கரை இரண்டு டீஸ்பூன், காபி தூள் ஒரு டீஸ்பூன் சேர்த்து நன்றாகக் கலக்கி ஸ்கிரப் மாதிரி தயாரித்துக்கொண்டு,

அதை பாதம் முழுவதும் அப்ளை செய்த பின், 15 நிமிடங்கள் வைத்திருந்து கால்களைக் கழுவிக்கொள்ளவும்.

இதை வாரத்தில் ஒருமுறை செய்து வரவும்; பாத வெடிப்பு நிச்சயம் குறைந்துவிடும். Home remedies for cracked heels

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

ராஜ்

மோடி காட்டும் தேசிய கொடி: அப்டேட் குமாரு

சிப்காட் போராட்டம்: விவசாயிகள் மீதான குண்டர் சட்டம் ரத்து!

+1
0
+1
0
+1
0
+1
1
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *