கிறிஸ்டோபர் நோலனின் டார்க் நைட்டில் பேட்மேனின் கார் ஒரு பொத்தானை அழுத்தினால் பைக்காக மாறுவதை நீங்கள் பார்த்திருக்கிறீர்களா?
இந்தியாவைச் சேர்ந்த இரு சக்கர வாகன நிறுவனமான ஹீரோ மோட்டோகார்ப் ஹாலிவுட் படத்தில் இடம்பெற்ற அந்த ரீல் காட்சியை தற்போது ரியல் காட்சியாக மாற்றியுள்ளது.
இந்தியாவின் குடியரசுத் தினமான கடந்த 26ஆம் தேதி ஹீரோ மோட்டோகார்ப்-க்கு சொந்தமான சர்ஜ் ஸ்டார்ட்அப் நிறுவனம், அதன் புதுமையான மின்சார வாகன தயாரிப்பாக ’சர்ஜ் எஸ்32’ஐ அறிமுகப்படுத்தியது.
தனித்துவமிக்க இந்த சர்ஜ் எஸ்32 பார்ப்பதற்கு மூன்று சக்கர சரக்கு வாகனமாக வடிவமைக்கப்பட்டுள்ளது. ஆனால் வெறும் 3 நிமிடங்களில் இது ஒரு மின்சார இரு சக்கர ஸ்கூட்டராக கண்முன்னே மாறுவது வாகன உற்பத்தியில் புதிய புரட்சியாக பார்க்கப்படுகிறது.
RPG குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா சமீபத்தில் சர்ஜ் S32 வின் வீடியோவை தனது எக்ஸ் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். இது நாடு முழுவதும் உள்ள மின்சார வாகன ஆர்வலர்களிடையே பெரும் ஆர்வத்தை எழுப்பியுள்ளது.
https://twitter.com/hvgoenka/status/1750841528002699676
சர்ஜ் S32 – சிறப்பம்சங்கள் என்ன?
Hero MotoCorp இன் சர்ஜ் S32 சுயதொழில் செய்பவர்களுக்காக வடிவமைக்கப்பட்டுள்ளது. சர்ஜ் எஸ்32 என்பது டூ இன் ஒன் எலக்ட்ரிக் வாகனம் (EV). அதில் 32 என்பது மூன்று சக்கர வாகனம் மற்றும் இரு சக்கர வாகனத்தை குறிக்கிறது.
3W சக்தி கொண்ட இந்த சர்ஜ் S32 ஆனது முன்பக்கத்தில் ஓட்டுநர் இருக்கையுடன் முழுமையான விண்ட்ஸ்கிரீன், ஹெட்லைட்கள், டர்ன் இண்டிகேட்டர்கள் மற்றும் விண்ட்ஸ்கிரீன் வைப்பர்கள் போன்ற அத்தியாவசிய அம்சங்களுடன் கூடிய இந்த மூன்று சக்கர மின்சார வாகனம் முச்சக்கர சரக்கு வாகனத்தை ஒத்திருக்கிறது.
முன்பக்க பயணிகள் அறை, விண்ட்ஸ்கிரீன், ஹெட்லைட்கள், டர்ன் இண்டிகேட்டர்கள் மற்றும் விண்ட்ஸ்கிரீன் வைப்பர்கள்
முகப்பு பக்கம் மேல் நோக்கி திறக்க கூடிய வகையில் zippered மென்மையான கதவுகளை வழங்கும் வாய்ப்பு உள்ளது.
ஒரு பொத்தானை அழுத்தினால், முகப்பு கண்ணாடி செங்குத்தாக உயர்த்தப்பட்டு, 3 நிமிடங்களில் 2W மின்சார ஸ்கூட்டரை வெளி கொண்டு வந்துவிடுகிறது. இதில் தனியாக LED ஹெட்லைட்கள், டர்ன் இண்டிகேட்டர்கள், ஸ்பீடோ மீட்டர் மற்றும் சுவிட்ச் கியர் ஆகியவற்றைக் கொண்டுள்ளது.
3W சக்தி கொண்ட இந்த வாகனம் 10 kW (13.4 bhp) இன்ஜினைக் கொண்டுள்ளது. அதே நேரத்தில் ஸ்கூட்டரில் 3 kW (4 bhp) எஞ்சின் பொருத்தப்பட்டுள்ளது. மூன்று சக்கர வாகனத்தில் 11 kWh பேட்டரி பொருத்தப்பட்டுள்ளது. ஸ்கூட்டர் 3.5 kWh பேட்டரியைக் கொண்டுள்ளது.
மூன்று சக்கர வாகனம் மணிக்கு 50 கிமீ வேகத்தில் செல்லும் நிலையில், ஸ்கூட்டரில் சற்றே வேகமாக மணிக்கு 60 கிமீ வேகத்தில் பயணம் செய்ய முடியும்.
மேலும் இந்த சரக்கு வாகனத்தில் 500 கிலோ சுமையை தாங்கி செல்லும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.
ஹீரோ மோட்டார்கார்ப்பின் இந்த சர்ஜ் எஸ் 32 இது வணிகங்கள் மற்றும் போக்குவரத்து நெரிசல் மிகுந்த நகர்ப்புறங்களில் செல்லும் டெலிவரி ஓட்டுநர்களுக்கு ஏற்றதாக அமைந்துள்ளது. மேலும் மின்சார வாகன தொழில்நுட்பத்திலும் குறிப்பிடத்தக்க முன்னேற்றத்தை காட்டியுள்ளது.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ்ஆப் சேனலில் இணையுங்கள்…
கிறிஸ்டோபர் ஜெமா
ஸ்பெய்னில் ஸ்டாலின் : இந்திய தூதருடன் சந்திப்பு!
முஷ்டபிகுர் ரஹ்மானுக்கு பதிலாக… இளம் வீரருக்கு வலை விரிக்கும் சென்னை?
Comments are closed.