பைக் பிரியர்கள் பெரிதும் எதிர்பார்த்த Hero Xtreme 125R பைக் இந்தியாவில் நேற்று (ஜனவரி 23) அறிமுகமாகி உள்ளது.
இந்தியாவை பொருத்தமட்டில் கார்களை விட பைக்குகள் தான் இளைஞர்களின் முதல் சாய்ஸ் ஆக உள்ளன. குறிப்பாக அதிக மைலேஜ் தரக்கூடிய விலையுர்ந்த பைக்குகளுக்கு என தனி ரசிகர் பட்டாளமே உள்ளது.
இதை நன்கு அறிந்து வைத்துள்ள பைக் நிறுவனங்கள் தங்களது புதிய தயாரிப்புகளை அவ்வப்போது அறிமுகப்படுத்தி வருகின்றன.
அந்த வகையில் ஹீரோ நிறுவனத்தின் Hero Xtreme 125R பைக் நேற்று இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டு உள்ளது.
இந்த பைக்கில் 125சிசி, சிங்கிள் சிலிண்டர், ஏர் கூல்டு என்ஜின் வழங்கப்பட்டு இருக்கிறது. மோனோஷாக் சஸ்பென்ஷன், பிரேக்கிங்கிற்கு முன்புறம் டிஸ்க், பின்புறம் டிஸ்க் மற்றும் டிரம் என இரண்டு ஆப்ஷன்கள் வழங்கப்படுகின்றன.
மேலும் எல்.இ.டி லைட்டிங், எல்.சி.டி ஸ்கிரீன், சிங்கில் சேனல் ஏ.பி.எஸ் போன்ற வசதிகளும் வழங்கப்பட்டு உள்ளன. இந்த பைக் 0 முதல் 60 கிலோமீட்டர் வேகத்தை வெறும் 5.9 நொடியில் பிக்கப் செய்து விடுகிறது. ஒரு லிட்டருக்கு 66 கிலோ மீட்டர் மைலேஜ் தரும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது.
இதன் விலை ரூபாய் 95 ஆயிரத்தில் இருந்து ரூபாய் 99 ஆயிரம் வரை இருக்கும் என தெரிகிறது. வருகின்ற பிப்ரவரி மாதம் 2௦-ம் தேதி முதல் இந்த பைக்குகள் வாடிக்கையாளர்களுக்கு டெலிவரி செய்யப்படலாம் என தகவல்கள் வெளியாகி இருக்கின்றன.
கலரினைப் பொறுத்தவரை நீலம், சிவப்பு, கருப்பு ஆகிய 3 வண்ணங்களில் இந்த பைக்குகள் வடிவமைக்கப்பட்டு உள்ளன.
–மஞ்சுளா
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
கார் விபத்து : மம்தாவுக்கு தலையில் அடி!
சென்னைக்குள் அனுமதி இல்லை: போக்குவரத்துத் துறை எச்சரிக்கை!