ரீஎண்ட்ரி கொடுக்கும் 90s கிட்ஸின் ஃபேவரைட் பைக்!

Published On:

| By Jegadeesh

90’s கிட்ஸ்களின் ஃபேவரைட் ஸ்போர்ட்ஸ் பைக் என்றால் அது ஹீரோவின் கரிஷ்மா (Karizma ) பைக் தான். சூப்பர் பைக் லிஸ்ட்டில் பல பைக்குகள் இருந்தாலும் கரிஷ்மா பைக்கிற்கான மதிப்பே தனி. எப்படி இன்றளவும் பைக் பிரியர்கள் சிலருக்கு Yamaha RX100 மீது அவ்வளவு விருப்பமோ அதேபோல் தான் கரிஷ்மா பைக்கிற்கான வரவேற்பும் பைக் பிரியர்களிடம் எப்போதும் குறைவதில்லை. ஹீரோ மற்றும் ஹோண்டா கூட்டணியில் 2 முறை கரிஷ்மா பைக் அறிமுகம் செய்யப்பட்டு விற்பனைக்கு வந்தது.

இந்நிலையில், 9 வருடங்களுக்கு பிறகு Hero MotoCorp நிறுவனத்தின் தயாரிப்பில் Karizma XMR 210 நேற்று (ஆகஸ்ட் 29) இந்திய சந்தையில் அறிமுகம் ஆகியுள்ளது. இந்த பைக்கை நடிகர் ஹ்ரித்திக் ரோசன் மும்பையில் நடைபெற்ற விழாவில் அறிமுகம் செய்து வைத்தார்.

கரிஷ்மா எக்ஸ்எம்ஆர் 210

காஸ்மெடிக் மாற்றங்களை பொறுத்தவரை, கரிஷ்மா எக்ஸ்எம்ஆர் 210 மிகவும் ஸ்போர்ட்டியான மற்றும் கவர்ச்சியான தோற்றத்தைக் கொண்டுள்ளது. அட்ஜஸ்டபிள் விண்ட் குவார்டு, செதுக்கப்பட்ட மற்றும் முரட்டுத் தோற்றம் கொண்ட ஃப்யூவல் டேங்க் முன்பக்க எல்இடி ஹெட் லேம்புகள், மற்றும் கூர்மையான பின்பக்க லைட்டுகளும் வழங்கப்பட்டுள்ளன.

இதுதவிர, நவீனகால தொழில்நுட்ப வசதிகளாக இந்த பைக்கில் ப்ளூடூத் இணைப்பு வசதிக் கொண்ட முழு டிஜிட்டல் எல்சிடி வண்ண திரை ஒன்றும் வழங்கப்பட்டு இருக்கின்றது. இந்த திரையை மினி செல்போன் போல பயன்படுத்திக் கொள்ள முடியும். பெர்ஃபாமன்ஸை பொறுத்தவரை, 210 சிசி லிக்யூடு கூல்டு என்ஜின் பயன்படுத்தப்பட்டுள்ளது.

இந்த எஞ்ஜின் அதிகபட்சமாக 25.15 பிஎச்பி பவரையும், 20.4 என்எம் டார்க்கையும் வெளியேற்றும் திறன் கொண்டது. இத்துடன் 6 ஸ்பீடு கியர்பாக்ஸ் இணைக்கப்பட்டுள்ளது. பாதுகாப்பு அம்சமாக, பைக்கின் முன் மற்றும் பின் பக்க வீல்களில் டிஸ்க் பிரேக்குகளும், டூயல் சேனல் ஏபிஎஸ்-ம் வழங்கப்பட்டு இருக்கின்றது.

மேலும், சிறந்த சஸ்பென்ஷனுக்காக முன் பக்க வீலில் ப்ரீலோடட் அட்ஜஸ்டபிள் மோனோஷாக் அப்சார்பரும், பின் பக்கத்தில் ப்ரீலோடட் அட்ஜஸ்டபிள் மோனோஷாக் அப்சார்பரும் வழங்கப்பட்டுள்ளது. இந்தியாவில் இந்த புதிய ஹீரோ கரிஸ்மா எக்ஸ்எம்ஆர் 210 (Karizma XMR 210)  -ன் விலை ரூ. 1.72 லட்சம் என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

பழைய கரிஷ்மா பைக்கிற்கு கிடைத்த அதே வரவேற்பு இந்த Karizma XMR 210 மாடலுக்கும் கிடைக்கும் என்று எதிர்பார்க்கலாம்.

மு.வா.ஜெகதீஸ் குமார்

நாங்கள் அடிமைகளா?: எடப்பாடி

“தங்கப்பதக்கம் வெல்லாதது சற்று வருத்தம் தான்” – பிரக்ஞானந்தா

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel