பியூட்டி டிப்ஸ்: குதிகால் வெடிப்புகளை நீக்க ஈஸி வழி இதோ…

Published On:

| By Kavi

முக அழகின் பராமரிப்புக்குக் கொடுக்கும் முக்கியத்துவத்தை நம் உடலைத் தாங்கி நிற்கும் பாதங்களுக்குக் கொடுக்க மறந்துவிடுகிறோம். அதனால், ‘பாத வெடிப்பு’ என்பது பலரும் சந்திக்கும் பிரச்சினையாகி வருகிறது. இது அழகை மட்டுமல்லாமல், ஆரோக்கியத்தையும் பாதிக்கிறது.

இந்த நிலையில் குதிகால் வெடிப்புகளைக் குணப்படுத்துவதில் மருதாணி முக்கிய பங்கு வகிக்கிறது. ஒரு கைப்பிடி மருதாணி இலைகளோடு, கிழங்கு மஞ்சள் அல்லது கஸ்தூரி மஞ்சள் சிறிய துண்டு சேர்த்து, நன்றாக அரைக்கவும். இந்த கலவையை காற்று புகாத டப்பாவில் போட்டு, குளிர்சாதனப் பெட்டியில் பாதுகாத்து வைத்து பயன்படுத்தலாம். இரவு தூங்க செல்வதற்கு முன்பு கால்களை வெதுவெதுப்பான நீரில் சுத்தம் செய்துவிட்டு, அரைத்து வைத்திருக்கும் கலவையை வெடிப்பு உள்ள இடங்களில் பூச வேண்டும். இவ்வாறு தொடர்ந்து சில வாரங்கள் செய்து வந்தால், பாத வெடிப்பு நீங்கும்.

பாதங்களில் உண்டாகும் வெடிப்புகளில் கிருமிகளால் தொற்று ஏற்படக்கூடும் என்பதால் ஒரு டீஸ்பூன் மஞ்சள் தூளுடன், 2 டீஸ்பூன்  நல்லெண்ணெய் அல்லது விளக்கெண்ணெய் கலந்து, வெடிப்பு உள்ள இடங்களில் தடவி வரலாம். இதன் மூலம் கிருமிகள் நீங்கி, பாதங்களில் ஏற்படும் வலி, எரிச்சல் போன்றவை  குணமாகும்.

அடுத்து குதிகால் வெடிப்புக்கு மிகச் சிறந்த நிவாரணம் பாதங்களை மசாஜ் செய்வது. பாதங்களில் உள்ள சருமம் வறண்டு போகாமல் இருக்க நல்லெண்ணெய், ஆலிவ் எண்ணெய், தேங்காய் எண்ணெய் மூன்றையும் சம அளவு கலந்து மசாஜ் செய்யலாம். இதன் மூலம், வெடிப்புகள் நீங்கி பாதங்கள் மென்மையாகும்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

டாப் 10 செய்திகள் : பிரதமரின் மனதின் குரல் முதல் நீட் மறு தேர்வு முடிவு வரை!

சண்டே ஸ்பெஷல்: பிரியாணி… எப்போது, எப்படி, எந்தளவு சாப்பிடுவது நல்லது?

மேட்சை மாற்றிய அந்த கேட்ச்… டி20 உலக கோப்பையை கைப்பற்றிய இந்தியா!

டிஜிட்டல் திண்ணை: நிதிஷ்குமாரின் நெருப்புத் தீர்மானங்கள்- இருபது நாட்களில் மோடிக்குத் தொடங்கிய நெருக்கடி!