ஹெல்த் டிப்ஸ்: அடிக்கடி ஏற்படும் வாய்ப்புண்… நிரந்தர தீர்வு இதோ!

Published On:

| By Selvam

நம்மில் பலருக்கு அடிக்கடி வாய்ப்புண் வரும். சிலர் பி காம்ப்ளெக்ஸ் மாத்திரை சாப்பிடுவார்கள். சில நாட்களுக்குப் பிறகு மீண்டும் வரும். இதற்கு, பொதுநல மருத்துவர்கள் சொல்லும் தீர்வு இதோ…

‘ஆப்தஸ் அல்சர்’ (Aphthous ulcers) எனப்படும் வாய்ப்புண்  அடிக்கடி வருவதற்கு மூன்று முக்கிய காரணங்கள் இருக்கலாம். முதலில் வாய் சுகாதாரம் எப்படியிருக்கிறது என்று பார்க்க வேண்டும்.

சிலர் பிரஷ் செய்யும் முறையாலும், சிலரது பல் வரிசையாலும்கூட வாய்ப்புண் வரலாம். பேசும்போதும், சாப்பிடும்போதும் பற்களும் அவற்றைச் சுற்றியுள்ள திசுக்களும் எப்போதும் இயங்கிக் கொண்டே இருப்பதால் உராய்வு ஏற்பட்டு, வாய்ப்புண்களை ஏற்படுத்தலாம்.

அடுத்ததாக ஊட்டச்சத்துக் குறைபாடு மிக முக்கியமான ஒரு காரணம். குறிப்பாக வைட்டமின் ஏ, பி மற்றும் சி சத்துக் குறைபாடுகள் இருந்தால் அடிக்கடி வாய்ப்புண் வரலாம்.

மூன்றாவதாக… நம் உணவுப் பழக்கம். வெறும் வயிற்றில் காபி, டீ குடிப்பது, சூடாக குடிப்பது, எண்ணெய்ப் பண்டங்கள், எலுமிச்சை, ஆரஞ்சு, ஸ்ட்ராபெர்ரி உள்ளிட்ட சிட்ரஸ் வகை பழங்களை அதிகம் சாப்பிடுவது போன்றவற்றாலும் வாய்ப்புண்கள் வரலாம்.

எனவே, வாய் சுகாதாரத்தைச் சரி பாருங்கள். ஊட்டச்சத்து குறைபாடு இருக்கிறதா என பாருங்கள். பிரச்சினை வரும்போது மாத்திரை எடுத்துக்கொள்வது தீர்வாகாது.

தினமும் ஒரு முட்டை சாப்பிடலாம். அதில் அபரிமிதமான ஊட்டச்சத்துகள் உள்ளன. அதேபோல தினமும் ஒரு பழம் சாப்பிடப் பழகுங்கள்.

வாய் சுத்தம் பேணுவது அவசியம். காலையும் இரவும் பல் துலக்க வேண்டும். பல் மருத்துவரை அணுகி, பற்களைப் பரிசோதிப்பதும் அவசியம்.

கூரான பற்கள் இருந்து அவற்றால் உராய்வு ஏற்பட்டு அதனால் புண் ஏற்படுகிறதா என்றும் பார்க்க வேண்டும். அதை தொடர்ந்து மருத்துவர்களின் ஆலோசனைபடி செயல்பட்டால் வாய்ப்புண்ணுக்கு நிரந்தர தீர்வு நிச்சயம்” என்கிறார்கள்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

விஜய் மாநாட்டில் கவனம் ஈர்த்த தொகுப்பாளினி: யார் இவர்?

தீபாவளி ஆஃபரா? பொங்கல் ஆஃபரா? – அப்டேட் குமாரு

“காமராஜரை சொந்தம் கொண்டாட எங்களுக்கே உரிமை” : செல்வப்பெருந்தகை

தாம்பரம்: 150 கிலோ கஞ்சா பறிமுதல்… இருவர் கைது!