பியூட்டி டிப்ஸ்: புருவங்கள் அடர்த்தியாக வளர… ஈஸி வழிகள் இதோ!

டிரெண்டிங்

சிலருக்கு சிறுவயதில் புருவங்கள் அடர்த்தியாக, கருமையாக இருக்கும். வயதாக ஆக புருவங்கள் மெலிந்து கொண்டே வரும். புருவ முடிகள் நரைக்கவும் தொடங்கிவிடும். இதை சரி செய்ய ஈஸி வழிகள் இதோ…

`ஸ்கேன்ட்டி ஐப்ரோஸ்’ (Scanty Eyebrows) என்கிற பிரச்சினை நிறைய பேருக்கு இன்று இருக்கிறது. தலைமுடியோ, புருவங்களில் உள்ள முடியோ… இல்லாததை வளரச் செய்வது என்பது சாத்தியமில்லாதது. ஆனால், இருப்பதைத் தக்கவைத்துக்கொள்ள முயற்சிகள் எடுக்கலாம்.

விளக்கெண்ணெய், கேரட் சீட் ஆயில், வெஜிடபிள் கிளிசரின் மூன்றையும் வாங்கிக் கொள்ளவும். 50 மில்லி விளக்கெண்ணெயில் (castor oil) 300 சொட்டு கேரட் சீட் ஆயில் (carrot seed oil) சேர்க்கவும். 5 மில்லி கிளிசரின் (glycerin) சேர்த்து கலந்து ஒருநாள் முழுவதும் அப்படியே வைத்திருக்கவும்.

புருவங்களை வெந்நீரில் நனைத்த துணியால் துடைத்துவிடவும். பிறகு, புருவங்களுக்கான சின்ன சீப்பு வைத்து எதிர்த்திசையில் வாரிவிடவும். பிறகு, தயார் செய்துவைத்துள்ள எண்ணெய்க் கலவையில் விரலைத் தொட்டு, புருவங்கள் வளரும் திசையிலேயே மீண்டும் மீண்டும் தடவவும். அரை மணி நேரம் அப்படியே விடலாம்.

ஐப்ரோ பென்சிலின் முனைப்பகுதியை நீங்கள் தயாரித்து வைத்துள்ள எண்ணெய்க் கலவையில் மூழ்கும்படி போட்டு வையுங்கள். இரவு தூங்கும் முன் மீண்டும் புருவங்களை எதிர்த்திசையில் வாரிவிட்டு, எண்ணெயில் ஊறிய ஐப்ரோ பென்சிலால் புருவங்களின் மேல் ஏழெட்டு முறை வரைந்துவிட்டு அப்படியே  தூங்கிவிடுங்கள். மறுநாள் காலை கழுவிவிடுங்கள்.

தொடர்ந்து ஒரு மாதம் இப்படிச் செய்து வந்தால் புருவங்கள் போஷாக்கு அடைந்து, உதிர்ந்த முடிகள் மீண்டும் உயிர் பெற்று, கருமையாக வளரத் தொடங்கும்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

கிச்சன் கீர்த்தனா: நார்த்தங்காய் ஊறுகாய்

டிஜிட்டல் திண்ணை: அவசரப்படுத்திய அண்ணாமலை… ஆத்திரப்பட்ட நிர்வாகிகள்… ஒற்றைத் தொகுதியில் சுயேச்சை ஓபிஎஸ்- சூடான பின்னணி!

ஆரம்பமே இப்படியா? – அப்டேட் குமாரு

பாஜக, பாமக, அமமுக… : என்.டி.ஏ கூட்டணி போட்டியிடும் தொகுதிகள் பட்டியல்!

+1
0
+1
0
+1
0
+1
1
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *