ஹெல்த் டிப்ஸ்: உணவு விஷயத்தில் குறையாத எடை… என்னதான் தீர்வு?

Published On:

| By Kavi

Healthy Foods to Weight Loss

சிலர் உடல் எடையைக் குறைக்கும் முயற்சியில் சில உணவு முறைகளைப் பின்பற்றுவார்கள். ஆனால் எடைக்குறைப்பு என்பது எனக்கு பெரும் சவாலாக இருக்கும். இதற்குத் தீர்வு என்ன? ஊட்டச்சத்து ஆலோசகர் தரும் விளக்கம் இதோ…

“இந்தக் கேள்வி பலருக்கும் இருக்கிறது. முதல் வேலையாக, சில விஷயங்களை செக்லிஸ்ட் போல வைத்துக்கொண்டு சரி பாருங்கள். ஆரோக்கியமான உணவு என்ற எண்ணத்தில் அவற்றை அளவுக்கதிகமாக எடுத்துக் கொள்வது…

உதாரணத்துக்கு, ஒரு நாளைக்கு இரண்டு கிலோ கொய்யாப்பழம் சாப்பிடுவது, ஏகப்பட்ட பழங்கள் சாப்பிடுவதெல்லாம் கலோரி எண்ணிக்கையைக் கூட்டும். அதே மாதிரி, பாதாம், பிஸ்தா, வால்நட் போன்றவற்றை கைப்பிடி அளவு எடுத்துக்கொள்வது… இவற்றில் கொழுப்பும் அதிகம், புரதச்சத்தும் அதிகம்.

புரோட்டீன் ஷேக், ஜூஸ் போன்றவற்றை அதிகம் குடிப்பது… அவற்றில் சர்க்கரை அளவு அதிகமிருக்கும். பல உணவுகளில் ஃப்ரக்டோஸ், மால்டோஸ், சுக்ரோஸ் போன்ற மறைமுக சர்க்கரை அதிகமிருக்கும்.

எனவே உணவுப்பொருள்களை வாங்கும்போது அவற்றின் லேபிளை பார்த்து வாங்கினால் நம்மை அறியாமல் அளவுக்கதிக சர்க்கரை சேராமல் பார்த்துக் கொள்ள முடியும். ஆரோக்கியமான உணவு என்றாலும் அளவு முக்கியம். எடைக்குறைப்பு முயற்சியில் இருக்கிறீர்கள் என்றால் நீங்கள் சாப்பிடும் ஒவ்வொன்றையும் டைரியில் குறிப்பதை வழக்கப்படுத்திக் கொள்ளுங்கள்.

ஒவ்வோர் இரண்டு மணி நேரத்துக்கும் எதையாவது சாப்பிடும் பழக்கம் இருந்தால் அதைத் தவிர்க்கவும். அந்த அட்வைஸ் எல்லோருக்குமானது அல்ல. இவற்றை கவனித்து வந்தாலே எங்கே தவறு நடக்கிறது என்பதைக் கண்டுபிடித்து திருத்திக்கொள்ள முடியும்” என்று விளக்கமளிக்கிறார்கள்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

ஒரே நாடு ஒரே தேர்தல் மசோதா கொடூரமானது : ஸ்டாலின்

கீர்த்தி சுரேஷ் திருமணம்: நேரில் வாழ்த்திய விஜய்

72 ஆண்டுகளில் குறைவான நாட்கள் கூடிய பேரவை : பட்டியலிட்டு ராமதாஸ் காட்டம்!

கம்பீரமான அழகியல்… வைக்கத்தில் அமைச்சர் வேலுவை பாராட்டிய ஸ்டாலின்

1.60 லட்சம் கோடியுடன் ரஷ்யாவுக்கு தப்பிய சிரிய அதிபர்… மாஸ்கோவில் உல்லாச வாழ்க்கை!

வைக்கத்தில் பெரியார் நினைவகம் திறப்பு!

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share