பொதுவாக 35-40 வயது தாண்டினால் கால் மூட்டில் உள்ள திரவம் குறைய ஆரம்பிக்கும் என்பதே நிதர்சனம். அதனால் நடப்பதற்கே மிகவும் சிரமமாக கூடும். அத்துடன் பல உடல் உபாதைகளும் வந்துவிடக்கூடும்.
நம் உடலில் தண்ணீரின் அளவு குறைவதால் உடலுக்கு தேவையான வைட்டமின் சத்துக்கள் குறையக் கூடும். இதனால் மூட்டுகள் உள்ளிட்ட எலும்புகளில் இருக்கும் கூழ் போன்ற மஜ்ஜை நாளுக்குநாள் குறைந்து மூட்டுகளில் வலி ஏற்படும். இந்த வலியானது சிலநேரங்களில் நடக்கவிடாமல் கால்களில் அழுத்தத்தை கொடுக்கும்.
இது போன்ற பிரச்சனைகளை அப்பொழுதே சரி செய்யாவிட்டால் ஒரு கட்டத்திற்கு மேல் குணப்படுத்த முடியாத நிலை ஏற்படும்.
இதற்கு கற்றாழை நிச்சயமான பலனைத் தருகிறது. கற்றாழை வகைத் தாவரங்களில் சோற்றுக் கற்றாழைதான் உணவாகப் பயன்படுத்தப்படுகிறது. மிக சாதாரணமாக கிடைப்பதும் சோற்றுக் கற்றாழைதான்.
மூட்டு வலியில் இருந்து நிவாரணம் பெற அலெசான் போன்ற வகையான ஹெல்த் ட்ரிங்க் பயன் உள்ளதாக இருக்கும் என்று இணையத்தில் பரவலாக பேசப்படுகிறது. மருத்துவர்களிடம் ஆலோசித்து இதனை பயன்படுத்தினால் சரியான தீர்வு கிடைக்கலாம். இந்த ட்ரிங்க் சோற்று கற்றாழையிலிருந்து தயாரிக்கப்படுகிறது.
இன்றைய காலகட்டத்தில் உடல் எடையைக் குறைக்க நடப்பவர்களே அதிகம். அதனால்தான் நடைப்பயிற்சிக்காக மக்கள் குவியும் எல்லா இடங்களிலும் கற்றாழை ஜூஸ் வியாபாரம் படு ஜோராக நடக்கிறது.
மற்ற ஜூஸ்களை காட்டிலும் கற்றாழை ஜூஸ் மக்களிடையே நல்ல மவுசை பெற்றுள்ளது. ஆரோக்கியமுடன் வாழவேண்டும் என்றால் வாரத்தில் சில நாட்கள் கற்றாழை ஜூஸ் குடிக்கலாம். கற்றாழை என்பது உடலுக்கு மிகக் குளிர்ச்சி என்பதால் இதைப் பயன்படுத்துவதில் கவனமும் தேவை.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
சுபஸ்ரீ