ஹெல்த் டிப்ஸ்: ‘புரோட்டீன் பவுடர்’ எல்லாருக்கும் ஏற்றதா?

டிரெண்டிங்

தைராய்டு பாதிப்பினால் உடல் எடை கூடிக்கொண்டே போகிறவர்களின் டயட் லிஸ்ட்டில் கொழுப்பு உணவுகளைத் தவிர்த்து புரோட்டீன் தேவைக்காக ‘புரோட்டீன் பவுடர்’ (Protein Powder) எடுத்துக்கொள்ள பரிந்துரைக்கிறார்கள் மருத்துவர்கள். அப்படியானால் அதன் அளவு எவ்வளவு இருக்க வேண்டும்? சிலர் புரோட்டீன் பவுடரால் மேலும் எடை கூடும் என்று சொல்கிறார்களே… அது உண்மையா? இது எல்லாருக்கும் ஏற்றதா? யாரெல்லாம் சாப்பிட வேண்டும்?டயட்டீஷியன்ஸ் என்ன சொல்கிறார்கள்?

உணவின் மூலம் போதுமான புரோட்டீன் சத்து கிடைக்காத பட்சத்திலும், புரதச்சத்துள்ள உணவுகளைத் தேடித் தேடிச் சமைக்க முடியாத நிலையிலும், அப்படியே சமைக்கும் புரத உணவுகள் சீக்கிரமே கெட்டுப் போகாமல் இருக்கவும் ரெடிமேடு புரோட்டீன் பவுடர் (Protein Powder) பெரிதும் உதவும்.

புரோட்டீன் பவுடர்களில் அதிகபட்ச புரதச்சத்து இருக்கும். அது அரிசி, முட்டை, பால், பட்டாணி, ஹெம்ப் சீட்ஸ் (hemp seeds), பிரவுன் ரைஸ், சோயா, நட்ஸ் போன்றவற்றிலிருந்து பெறப்பட்டதாக இருக்கும்.

எடைக் குறைப்பு முயற்சியில் இருப்பவர்களுக்கு புரதச்சத்து மிகவும் அடிப்படையானது. சரியான எடையைத் தக்கவைத்துக் கொள்ளவும், தசையிழப்பு ஏற்படாமல் இருக்கவும், நோய் எதிர்ப்பாற்றலுக்கும், உடற்பயிற்சிகளுக்குப் பிறகான வலிமைக்கும் புரதச்சத்து மிக முக்கியம்.

புரதம் நிறைந்த உணவு, பசி உணர்வைக் கட்டுப்படுத்தும், அடிக்கடி உணவுகளைத் தேடுவதைத் தடுக்கும். தசைகளின் அடர்த்திக்கு உதவி, எலும்புகளின் வலிமைக்கும் உதவும். இனிப்பு மற்றும் கார்போஹைட்ரேட் உணவுகளின் மீதான ஈர்ப்பைக் குறைக்கும். எனவே, உணவில் கார்போஹைட்ரேட் மற்றும் கொழுப்புக்கு மாற்றாக, புரதச்சத்தை அதிகரிப்பதன் மூலம், பசியைத் தூண்டும் க்ரெலின் (Ghrelin) என்ற ஹார்மோன் சுரப்பைக் கட்டுப்படுத்த முடியும். ரெடிமேடு புரோட்டீன் பவுடரை தண்ணீரிலோ, நட்ஸ் மில்க்கிலோ, யோகர்ட்டிலோ, ஸ்மூத்தியிலோ கலந்து குடிக்கலாம்.

உடற்பயிற்சிகள் செய்வதற்கு முன்பு அல்லது பிறகு இதை எடுப்பதுதான் சரியானது. ஒருவருக்கு ஒரு நாளைக்கு எவ்வளவு புரதச்சத்து தேவை என்பது அவரது எடை, உயரம், புரதச்சத்து எடுக்கும்போது அவரது உடல் எப்படி ரியாக்ட் செய்கிறது போன்ற பல விஷயங்களைப் பொறுத்து முடிவு செய்யப்பட வேண்டியது அவசியம். பொதுவாக உடல் எடையில் ஒரு கிலோவுக்கு 0.8 முதல் 1 கிராம் வரை என்ற கணக்கில் எடுத்துக்கொள்ள வேண்டும் என்பது அவசியம்.

டாப் 10 செய்திகள்… இதை மிஸ் பண்ணாதீங்க!

பதினெட்டாவது மக்களவைக்கான நாடாளுமன்ற தேர்தல்! வெல்லட்டும் மக்களாட்சி! வீழட்டும் அதிகாரக் குவிப்பு!

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *