நம்மில் பலருக்கு தங்களின் தினசரி உணவில் நெய் சேர்க்கும் பழக்கம் உள்ளது. இது நறுமணத்திற்கு மட்டும் அல்ல அதன் சுவையும் அதிகரிக்கும். இது ஆரோக்கியத்திற்கு மிகவும் நல்லது என நம் அனைவருக்கும் தெரியும். ஆயுர்வேதத்தில், நெய் அமிர்தத்துக்குக் நிகரானதாக கருதப்படுகிறது.
நெய் உட்கொள்ளும் போது, சில முக்கியமான விஷயங்களை மனதில் கொள்ள வேண்டும். நெய் சாப்பிடும் போது கடைபிடிக்க வேண்டிய 3 முக்கிய விதிகள் பற்றி இந்த தொகுப்பில் பார்க்கலாம்.
சூடான உணவுகளுடன் நெய் சாப்பிடவும்
எப்போதும் நெய்யை சூடான ஏதாவது ஒன்றோடு இணைத்து சாப்பிட வேண்டும். இதை உங்கள் சூடானசப்பாத்தி மற்றும் காய்கறிகளில் ஊற்றி சாப்பிடலாம்.
அல்லது வெந்நீரில் கலந்து குடிக்கலாம். இவ்வாறு உட்கொள்வதால், நெய் தொண்டையில் தேங்காது. மேலும், நெய் ஜீரணமாகி நன்றாக உறிஞ்சப்படுகிறது.
தேனுடன் நெய்யை கலக்கக்கூடாது
தேன் மற்றும் நெய்யை ஒரே நேரத்தில் சாப்பிடக்கூடாது என்பதை நினைவில் வைத்துக்கொள்ளுங்கள். உணவில் இவை இரண்டையும் சம அளவில் பயன்படுத்துவதைத் தவிர்க்கவும்.
ஏனென்றால், ஆயுர்வேதத்தில், நெய் மற்றும் தேன் கலவையானது தீங்கு விளைவிக்கும் என்று கருதப்படுகிறது. ஏனெனில், அவை ஒன்றுக்கொன்று எதிரான பண்புகளைக் கொண்டுள்ளன.
எனவே, எப்போதும் தேன் மற்றும் நெய் ஆகிய இரண்டும் உள்ள உணவுகளை சாப்பிடுவதை தவிர்க்கவும்.
நெய் சாப்பிட சரியான நேரம் எது?
ஆயுர்வேதத்தின் படி, காலை நேரமோ அல்லது வெறும் வயிற்றில் நெய் சாப்பிடுவதோ சிறந்த நேரம் அல்ல.
ஆனால், பித்த காலத்தில் இதை உட்கொள்ளும் போது, அதாவது மதியம் முக்கிய உணவோடு உட்கொள்ளும் போது, அல்லது உணவுக்கு சற்று முன் ஒரு ஸ்பூன் நெய்யை வாயில் வைத்து சாப்பிட்டால், பித்த தோஷத்தை சமன் செய்கிறது. சிறந்த செரிமானத்திற்கு உதவுகிறது.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
சுபஸ்ரீ
1992ல் செய்ததை மீண்டும் செய்யுமா பாகிஸ்தான்?
ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு எதிராக தமிழ்நாடு அரசு வழக்கு!
53 மின்சார ரயில்கள் ரத்து: கூடுதலாக மெட்ரோ ரயில்கள் இயக்கம்!
ஆப்கான் வீரர் ரஷீத் கானுக்கு ரூ.10 கோடி நிதியுதவி வழங்கினாரா ரத்தன் டாடா?