சிவப்பு நிறத்தில் இருக்கும் பழங்களில் பெரும்பாலானவை இனிப்பு சுவையுடன் நன்கு மொறுமொறு க்ரன்ச்சியாகவும் இருக்கும்.
பெரும்பாலான சிவப்பு நிறத்தில் உள்ள பழங்களில் ஆன்டி ஆக்சிடண்ட்டுகளும் அதிகமாக இருக்கும். நீர்ச்சத்து நிறைந்தவையாகவும் இருக்கும்.
சிவப்பு நிற பழங்களில் உள்ள பைட்டோ நியூட்ரியண்ட்டுகள் ரத்த அழுத்தத்தின் அளவைக் குறைத்து கார்டியோ வாஸ்குலர் நோய்கள் வராமல் தடுத்து இதய ஆரோக்கியத்தை மேம்படுத்தச் செய்கின்றன. சிவப்பு நிற காய்கறிகள் மற்றும் பழங்களில் வைட்டமின் ஏ அதிகமாக இருக்கிறது.
குறிப்பாக இந்த சிவப்பு நிற பழங்கள் மற்றும் காய்கறிகளில் உள்ள கரோட்டினாய்டுகள் கண் பார்வையை மேம்படுத்த உதவி செய்யும். குறிப்பாக வயதாகும் போது ஏற்படுகிற பார்வை கோளாறுகளைச் சரிசெய்ய உதவும்
சிவப்பு நிறத்தில் உள்ள காய்கறிகள் மற்றும் பழங்களில் அதிக நார்ச்சத்துக்கள் நிறைந்திருக்கின்றன.
நார்ச்சத்துக்கள் மலச்சிக்கல் உள்ளிட்ட பிரச்சினைகளைத் தவிர்த்து, ஜீரண ஆற்றலை மேம்படுத்தும். வளர்சிதை மாற்றத்தை அதிகரிக்கச் செய்து உடல் எடையைக் கட்டுக்குள் வைக்க உதவி செய்யும்.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
சுபஸ்ரீ
வந்தே பாரத் ரயில்கள்: வெளிநாட்டு நிறுவனத்துடன் ஒப்பந்தம் – ஐ.சி.எஃப் ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்!