உடல் எடையை குறைப்பதற்காக கிரீன் டீயைப் பயன்படுத்துபவர்கள் அநேகர். இந்த கிரீன் டீக்கு சருமத்தில் ஏற்படும் சுருக்கங்களையும், கருமையையும் போக்கும் தன்மையும் உண்டு.
கிரீன் டீயில் எண்ணற்ற ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள் நிறைந்துள்ளதால், அவை சருமத்தில் பழுதடைந்துள்ள செல்களைப் புதுப்பித்து, முதுமைத் தோற்றம் விரைவில் ஏற்படுவதையும் தடுக்கும். அதற்கு கிரீன் டீயை குடித்தாலோ அல்லது அதை சருமத்துக்குத் தேய்த்து, மசாஜ் செய்து வந்தாலோ, அவை சருமத்தில் ஏற்படும் சுருக்கங்களை தடுத்து, ஆங்காங்கு இருக்கும் கருமையையும் போக்கும்.
பருக்கள் அடிக்கடி உடைந்து பரவுவதற்கு காரணம், சருமத்தில் டாக்சின்கள் தங்கியிருப்பதே ஆகும். ஆகவே கிரீன் டீயை குடித்தால், அவை சருமத்தின் அடியில் தங்கியிருக்கும் டாக்சின்களை வெளியேற்றி, பருக்கள் அதிகம் ஏற்படுவதைத் தடுக்கும். கிரீன் டீயை சருமத்தில் தேய்த்தால் அவை சருமத்தைத் தாக்கும் புற ஊதாக்கதிர்களின் தாக்கத்தை எதிர்த்து, செல்கள் பாதிப்படையாமல் பாதுகாக்கும். அதுமட்டுமின்றி, இவை சருமத்தின் நிறம் மாறாமலும் தடுக்கும்.
கோடைக்காலத்தில் சருமத்தில் டாக்சின்கள் அதிகம் இருக்கும். அப்போது சருமம் பொலிவின்றி காணப்படும். இத்தகைய டாக்சின்களை முற்றிலும் போக்கும் திறன் கிரீன் டீயில் உள்ளது. எனவே, கருமை இல்லாத அழகான மற்றும் பொலிவான சருமம் பெற கிரீன் டீயைத் தொடர்ந்து பயன்படுத்துவது நல்லது.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
உலக அளவில் அதிக முறை இணையத்தளம் முடக்கப்பட்ட நாடுகள்: இந்தியாவின் சாதனை!
விராட் கோலியின் சாதனையை முறியடித்த பாபர் அசாம்