கோடை என்றாலே, பல வீடுகளிலும் மண்பானையில் தண்ணீர் ஊற்றிப் பருக ஆரம்பித்துவிடுவார்கள். மண்பானைத் தண்ணீரில் குளிர்ச்சி தாண்டி, ஆரோக்கியமும் இருக்கிறது என்று கூறும் சித்தா மருத்துவர்கள், அது பற்றி மேலும் விளக்குகிறார்கள்.
“சித்த மருத்துவத்தில் மண்பானை`பிருதிவி பூத அம்சம்’ கொண்டது. உடல் மற்றும் உடலின் உள் உறுப்புகளின் ஆரோக்கியத்துக்கு பிருதிவி பூதம் மிகவும் அவசியம். அதனால், மண்பாண்டப் பொருட்களைப் பயன்படுத்துவது உடலுக்கு நன்மை தரக்கூடியது.
குறிப்பாக, களிமண்ணில் ஏராளமான கனிமச் சத்துகள் நிறைந்துள்ளன. கார்பன், பாஸ்பரஸ், ஹைட்ரஜன், பொட்டாசியம், ஆக்ஸிஜன், மெக்னீசியம், கால்சியம், சல்பர், இரும்புச்சத்து, தாமிரம், துத்தநாகம், மாங்கனீசு, போரான், க்ளோரின், மாலிப்டினம், நிக்கல் போன்றவை களிமண்ணில் காணப்படுவதாக அறிவியல் ஆய்வுகள் தெரிவிக்கின்றன.
பொதுவாக, மனித உடலின் பி.எச் (pH – potential of hydrogen) அளவு 7.35 – 7.45. நம் உடலில் ரத்தத்தின் pH அளவு 7.4. மண்பானை நீரின் pH அளவு 7 – 8.
மனித உடலின் pH அளவும், களிமண்ணின் pH அளவும் ஓரளவு ஒத்திருப்பதால்தான், மண்பாண்டங்களில் வைத்திருக்கும் தண்ணீர் மற்றும் உணவை நாம் உட்கொள்ளும்போது, அது நன்மை தருவதாக அமைகிறது.
எனவே, கோடை என்றில்லாமல் எல்லா காலங்களிலுமே மண்பானையில் தண்ணீர் ஊற்றிவைத்து அருந்தலாம். இயன்றவர்கள், சமையலுக்கு மண்பாண்டங்கள் பயன்படுத்தலாம்.
இவ்வளவு சத்துகள் நிறைந்துள்ள மண்பானைகளில் தண்ணீர் வைத்துப் பயன்படுத்தும்போதும், சமைக்கும்போதும், வெப்பம் ஒரே சீராக ஊடுருவும்.
இதன் காரணமாகத்தான், மண்பாண்டங்களில் சமைத்த உணவுகள் சுவை, மனம் மாறாமல், நீண்ட நேரம் கெடாமல் இருக்கும்.
மண்பாண்டங்களில் வைக்கப்படும் உணவுப்பொருட்களால், உடல் குளிர்ச்சி அடையும். உடலின் வளர்சிதை மாற்றம் ஒழுங்குப்படுத்தப்படும்.
உடலில் ஏற்படும் அமிலத்தன்மை மாறுபாடு சரி செய்யப்படும். நல்ல செரிமானத்தைக் கொடுத்து, பசியைத் தூண்டும். வயிற்றுப் புண்கள் ஏற்படாமல் தடுக்கும்.
அதனால் கோடை என்றில்லாமல் எப்போதுமே மண்பானை, மண்பாண்டம் பயன்படுத்தலாம்’’ என்கிறார்கள்.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
கிச்சன் கீர்த்தனா: மல்ட்டி ஃப்ரூட் சாலட்
IPL 2024 : கடைசி ஓவரில் பதற வைத்த உனத்கட்… த்ரில் வெற்றி பெற்ற ஹைதராபாத்!
ஹெல்த் டிப்ஸ்: கடைகளில் ‘மில்க் ஷேக்’ குடிப்பது நல்லதா?
ஜாபர் சாதிக், அமீர் தொடர்புடைய இடங்களில் ED சோதனை!