ஐந்தறிவு ஜீவன்களில் இருந்து ஆறறிவு கொண்டவனாக மனிதனை தனித்துக்காட்டுவது சிரிப்பு. ஆனால், சிரிப்பை மறந்து வாழ்ந்துகொண்டிருக்கிறோம் என்பதே நிஜம்.
சிரிப்பு என்பது இதயங்களை மகிழ்ச்சி கடலில் ஆழ்த்தும். இந்த மகிழ்ச்சியானது உடலுக்கு மட்டுமன்றி மனதின் ஆரோக்கியத்துக்கும் வலுவூட்டும் அருமருந்தாக திகழும் என்பது எல்லாருக்கும் தெரிந்த விஷயம்தான் என்றாலும் நிகழ்ச்சிகளில் குரூப் போட்டோ எடுக்கும்போது போட்டோகிராபர் ‘ஸ்மைல் ப்ளீஸ்’ என்று சொன்னாலும்கூட சிரிப்பதற்கு யோசிக்கிறோம்.
உண்மையில்… ஆழ்ந்த சிரிப்பு நம் தசைகளை தளர்த்துகிறது. இது மன அழுத்தத்தை தவிர்க்க உதவுகிறது. இதனால் கவலை மட்டுமன்றி உடல் வலியும் குறைகிறது.
சிரிப்பதால் நமது உடல் முழுவதும் ஆக்சிஜன் ஓட்டம் அதிகரிக்கிறது. நமது நுரையீரலில் உள்ள பழைய காற்று வெளியேறுகிறது.
சிரிப்பு மன அழுத்தம் போக்கும் அரிய மருந்து என்பது உடலியல் ரீதியாகவும் மருத்துவம் உறுதிப்படுத்தியுள்ள உண்மை.
அதிக ரத்தக் கொதிப்பால் வரும் மாரடைப்பை விட, மகிழ்ச்சி குறைவால் வரும் மாரடைப்பே அதிகம் என்கிறது ஓர் ஆய்வு. வயிறு குலுங்க வைக்கும் சிரிப்புதான் மாரடைப்பை தள்ளிப்போடும் விலையில்லா மருந்து.
மேலும், வயிறு குலுங்க பத்து நிமிடங்கள் சிரிப்பது, இரண்டு மணி நேரம் வலியை மறக்க வைக்கும் நிவாரணத்துக்கு சமம்.
இது மட்டுமன்றி மனரீதியாக சிரிப்பு என்பது வாழ்க்கையை நேர்மறையாக உணரச் செய்கிறது. சவால்களை எதிர்கொள்ளவும், கடினமான சூழல்களை நிதானமாக சமாளிக்கவும் சிரிப்பு உதவுகிறது.
இதையெல்லாம் மனதில் வைத்து தான் நமது முன்னோர்கள் ‘வாய்விட்டு சிரித்தால் நோய்விட்டு போகும்’ என்று சொல்லி இருக்கிறார்கள். ஆழ்ந்த அனுபவத்தின் வெளிப்பாடான இந்த சொல் அத்தனை உண்மையானது. நாமெல்லாம் சிரிக்க தெரிந்தவர்கள்தானே… ஸ்மைல் ப்ளீஸ்!
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
IPL 2024 Awards: ஆரஞ்சு கேப் முதல் பர்பிள் கேப் வரை – எந்த விருது யாருக்கு?
IPL 2024: 3வது முறையாக கோப்பையை தூக்கிய KKR
மகாராஷ்டிரா சுரானா ஜூவல்லர்ஸில் ஐடி ரெய்டு: கட்டுக்கட்டாக சிக்கிய பணம்!
மறுபடியும் முதல்ல இருந்தா: அப்டேட் குமாரு