ஹெல்த் டிப்ஸ்: தலைவலிக்காக அடிக்கடி மாத்திரைகள் போடுபவரா நீங்கள்?

Published On:

| By Kavi

சிலருக்கு காலை நேரத்தில் லேசாக ஆரம்பிக்கும் தலைவலி நேரமாக ஆக உச்சத்தை அடையும். அதற்காக தலைவலி ஆரம்பிக்கும்போதே சில மாத்திரைகள் எடுத்துக்கொள்வார்கள். இது ஆபத்தை ஏற்படுத்தும் என்கிறார்கள் பொது மற்றும் நோய்க்குறியியல் மருத்துவர்கள்.

“தலைவலியில் பல வகைகள் உள்ளன. டீஹைட்ரேஷன் (Dehydration) எனப்படும் உடலில் நீர் வறட்சி ஏற்பட்டாலும் தலைவலி வரலாம்.

கண் பார்வையில் ஏதேனும் பிரச்சினைகள் இருந்தாலும் அதன் அறிகுறியாக தலைவலி வரலாம்.

பவர் அதிகமானாலோ, குறைந்தாலோ, பார்வை மங்கினாலோ தலைவலிக்கலாம். பார்வையில் பிரச்சினை இருப்பதை அலட்சியப்படுத்திவிட்டோ, அறியாமலோ, கண்ணாடி அணியாமல் இருப்பவர்களுக்கும் அடிக்கடி தலைவலி ஏற்படலாம்.

சிலருக்கு ஒரு பக்கம் வலிக்கிற ஒற்றைத் தலைவலி (மைக்ரேன்) ஏற்படலாம். டென்ஷன் தலைவலி என சிலருக்கு வரும். ஸ்ட்ரெஸ் காரணமாக ஏற்படுகிற இந்தத் தலைவலி, மதியம் தொடங்கி, மாலை, இரவு நெருங்க, நெருங்க அதிகமாகும்.

மூளையில் ஏதேனும் பிரச்சினை இருப்பதன் அறிகுறியாகவும் தலைவலி உணரப்படலாம். வெயிலில், வெளியில் நீண்ட நேரம் அலைந்து, வியர்வை அதிகம் வெளியேறி, தண்ணீரே குடிக்காதவர்களுக்கு உடலில் நீர் வறட்சி ஏற்பட்டிருக்கும். எனவே, இவர்கள் தலைவலி ஏற்படும்போது அதை நீர் வறட்சியின் அறிகுறியாகப் புரிந்துகொள்ளலாம்.

தலைவலி வரும்போது ஒவ்வொரு முறையும் நீங்களாக பாராசிட்டமால் (Paracetamol ) போன்ற தலைவலி மாத்திரைகள் எடுப்பது மிகவும் தவறு.

உங்கள் தலைவலிக்கான காரணம் கண்டுபிடிக்கப்பட்டு அதற்கான சிகிச்சை மேற்கொள்வதுதான் சரியானது. நீங்களாக சுய மருத்துவம் மேற்கொள்ளக் கூடாது.

ஒரு பக்கம் தலைவலியை உணர்பவர்கள், நரம்பியல் மருத்துவரை அணுகி, அது ஒற்றைத் தலைவலியா என்பதை உறுதி செய்து கொள்ள வேண்டும்.

காரணம் அறியாத தலைவலியாக இருந்தால், நரம்பியல் மருத்துவரின் பரிந்துரையோடு எம்ஆர்ஐ பரிசோதனை மேற்கொள்ள வேண்டியிருக்கும். என்ன பிரச்சினை என்பதற்கேற்ப சிகிச்சை அளிக்கப்படும்.

நீண்டகாலமாக தலைவலிக்காக மாத்திரைகள் எடுப்பது கல்லீரல், கிட்னி உள்ளிட்ட உறுப்புகளுக்கு நல்லதல்ல என்பதால் அதன் உபயோகத்தைத் தவிர்க்க வேண்டியது அவசியம்” என்று அறிவுறுத்துகிறார்கள்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

திராவிட இயக்கக் கதைகளால் பாடத்திட்டம் நிரம்பியுள்ளது: ஆளுநர் ரவி காட்டம்!

மறுபடியும் அதே உருட்டு: அப்டேட் குமாரு

என்றும் மக்களோடு அமைச்சர் கே.என்.நேரு… கோடை சொல்லும் சேதி!

ராஜஸ்தானில் இந்தியா கூட்டணி எத்தனை தொகுதிகளை வெல்லும்?

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel