WhatsApp: வரப்போகும் சூப்பர் அப்டேட் … ரொம்ப நல்ல விஷயம்!

டிரெண்டிங்

வாட்ஸ் அப் பயனாளர்களுக்கு பயனுள்ள வகையில், புதிய அப்டேட் ஒன்று விரைவில் வெளியாகவுள்ளது. அதுகுறித்து இங்கே பார்க்கலாம்.

உலகம் முழுவதும் உள்ள மக்களால் அதிகம் பயன்படுத்தப்படும் வாட்ஸ்அப் செயலியில் அவ்வப்போது அப்டேட்டுகள் வந்த வண்ணம் உள்ளன. அதில் தற்போது புதிதாக வர உள்ளதுதான் வாட்ஸ்அப்பில் வரும் வாய்ஸ் மெசேஜ்களை டெக்ஸ்ட் ஆக மாற்றி தரும் வாய்ஸ் ட்ரான்ஸ்கிரிப்ஷன்.

Mobile Phone: ரியல்மீ -க்கு போட்டியாக களமிறங்கிய விவோ… சிறப்பம்சங்கள் என்ன?

நம்மால் பல நேரங்களில் வாய்ஸ் மெசேஜ்களை கேட்க முடியாத நிலையில் இருப்போம், அந்த நேரங்களில் இந்த அப்டேட் மிகவும் பயனுள்ளதாக இருக்கும். நமக்கு வரும் வாய்ஸ் மெசேஜ்களை ட்ரான்ஸ்கிரிப்ட் மூலமாக டெக்ஸ்ட் ஆக மாற்றி தரும்போது, படித்துப் பார்த்து அதற்கேற்ப ரிப்ளை செய்து கொள்ளலாம்.

இந்த அப்டேட் ஆனது தற்போது வாட்ஸ்அப் பீட்டா வெர்ஷன் 2.24.7.7-ல் சோதனையில் உள்ளது. இது போனில் உள்ள Speech Recognition வாயிலாக எண்ட்-டூ-எண்ட் என்கிரிப்ட் செய்த ட்ரான்ஸ்கிரிப்ட்களை வழங்கும்.

வாய்ஸ் மெசேஜ்களை ட்ரான்ஸ்கிரிப்ட் செய்ய வழக்கத்தை விட 150 MB டேட்டா கூடுதலாக தேவைப்படும். டவுன்லோடு ஆனதும் வாய்ஸ் கேட்க வேண்டிய அவசியம் இல்லை. நேரடியாக டெக்ஸ்ட் ஆகவே கிடைத்து விடும்.

சோதனையில் உள்ள இந்த அப்டேட் விரைவில் ஆண்ட்ராய்டு பயனாளர்களுக்கு கிடைக்கும் என்ற தகவல் வெளியாகி இருக்கிறது. பாதுகாப்பாக போனிலேயே ட்ரான்ஸ்கிரிப்ட் செய்யும் வகையில் இந்த வாய்ஸ் ட்ரான்ஸ்கிரிப்ஷன் உருவாக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி இருக்கின்றன.

-பவித்ரா பலராமன் 

DC vs PBKS: மொரட்டு பார்மில் பஞ்சாப்… பிரீத்தி ஜிந்தா ஹேப்பி அண்ணாச்சி!

அமலாக்கத்துறை கைதை எதிர்த்து டெல்லி உயர்நீதிமன்றத்தில் கெஜ்ரிவால் மனு!

பொன்முடி முதல் தேஜஸ்வி சூர்யா வரை: ஒரே நாளில் விசாரிக்கப்பட்ட முக்கிய வழக்குகள்!

+1
0
+1
0
+1
0
+1
2
+1
0
+1
0
+1
0