ஹேப்பி பர்த்டே ரோலக்ஸ் சார்!

டிரெண்டிங்

விருதுகளை அள்ளிய கையோடு இன்று (ஜூலை 23) தனது பிறந்தநாளை நடிகர் சூர்யா கொண்டாடுகிறார்.
நடிகர் சூர்யா 1997ல் நேருக்கு நேர் படத்தின் மூலம் தனது திரை பயணத்தைத் தொடங்கினார். அதைத்தொடர்ந்த அவர் நடித்த நந்தா (2001), காக்க காக்க (2003), பிதாமகன் (2003), பேரழகன் (2004), கஜினி (2005), சில்லுனு ஒரு காதல் (2006) வேல் (2007), வாரணம் ஆயிரம் (2008), அயன் (2009), ஆகிய படங்கள் அவருக்கு வெற்றியை கொடுத்தன.
அதைத்தொடர்ந்து விவசாயம் நலன் சார்ந்த, சமூல நலன் சார்ந்த படங்களில் நடித்தார். காப்பான், ஜெய் பீம் உள்ளிட்ட படங்கள் சூர்யாவுக்கு இன்னும் ரசிகர்கள் பட்டாளத்தை அதிகரித்தது.
குறிப்பாக சூரரைப்போற்று படம் ஓடிடியில் வெளியானாலும் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்று தற்போது தேசிய விருதையும் குவித்துள்ளது.
தேசிய விருதுகளை அள்ளிய கையோடு இன்று நடிகர் சூர்யா தனது 47ஆவது பிறந்தநாளைக் கொண்டாடுகிறார். இதனை முன்னிட்டு சூர்யா ரசிகர்கள் தேசிய விருது வென்றதற்கும், பிறந்தநாளுக்கும் சேர்த்து வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். #”Best Actor” என்ற ஹேஷ்டேக் மூலம் வாழ்த்துகளைத் தெரிவித்து வருகின்றனர்.

இதனால் இந்த ஹேஷ்டேக் ட்ரெண்டிங்கில் இருக்கிறது. அதோடு #rolexsir என்ற ஹேஷ்டேக்கும் ட்ரெண்டிங்கில் இருக்கிறது.
சமீபத்தில் கமல் நடித்து வெளியான விக்ரம் படத்தில் சூர்யா ரோலக்ஸ் என்ற சிறப்புத் தோற்றத்தில் நடித்திருந்தார். விக்ரம் படம் முழுக்க கமலின் நடிப்புக்கு எழுந்த கைத்தட்டல், விசில் சத்ததைக் காட்டிலும் சூர்யாவுக்கு கூடுதலாகவே இருந்தது.

இந்நிலையில் விக்ரம் படத்தின் சூர்யா கதாப்பாத்திரத்தை குறிப்பிட்டு ரசிகர்கள் வாழ்த்துக் கூறிவருகின்றனர்.

+1
0
+1
0
+1
0
+1
1
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *