நகம் இல்லாத விரல்கள்: இணையத்தில் வைரல் புகைப்படம்!

டிரெண்டிங்

ஒரு கையில் 5 விரல்கள் இருந்தும் அவற்றில் நகங்கள் இல்லாத புகைப்படம் ஒன்று இணையதளத்தில் வைரலாக பரவி வருகிறது.

இந்தப் படத்தில் உள்ளவரின் கையில் 5 விரல்கள் காணப்படுகின்றன. ஆனால், அவற்றில் நகங்கள் எதுவும் இல்லை. பார்ப்பதற்கு நகங்களில் நக பாலீஷ் போட்டு மறைத்திருப்பாரோ என்று எண்ணத் தோன்றுகிறது.

உண்மையில், அப்படி எதுவும் அவர் செய்யவில்லை. அவர் ஓர் அரிய வகை நோயால் இந்த பாதிப்புக்கு உள்ளாகி இருக்கிறார். அனோன்சியா காங்கினிடா என்ற அரியவகை நோய்க்கு அவர் ஆளாகியிருக்கிறார்.

இந்த பாதிப்புக்கு உள்ளானவர்களுக்கு பிறக்கும்போதே கால்விரல்கள் மற்றும் கைவிரல்களில் நகங்கள் இருக்காது. அதன் பிறகும் நகம் வளராமல் தடுக்கப்படுகிறது.

இதுகுறித்து அமெரிக்காவில் உள்ள தேசிய பயோ டெக்னாலஜி தகவல் மையம், “அனோன்சியா காங்கினிடா என்பது மிகவும் அரிதான நோயாகும்.

இதனால் பிறக்கும்போதே நகங்கள் இருக்காது. இந்த பாதிப்புக்கு சிகிச்சை எதுவும் இல்லை. ஆனால் செயற்கை நகங்களை பொருத்திக் கொள்ளலாம்” எனத் தெரிவித்துள்ளது.

ஜெ.பிரகாஷ்

குஜராத் சட்டமன்றத் தேர்தல் அட்டவணை!

நகர சபையா? திமுகவின் நாடக சபையா?: மநீம கேள்வி!

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
1
+1
1

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *